Categories: Cinema News latest news throwback stories

ஒரே டான்ஸ் தான் மொத்த கேரியரும் காலி… வடிவேலுவால் வாழ்க்கை தொலைத்த ஸ்ரேயா…

Shreya: தமிழ் சினிமாவில் நாயகிகள் மார்க்கெட் குறையும் போது தான் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடுவார்கள். ஆனால் நடிகை ஸ்ரேயா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே அந்த தப்பை செய்து மொத்த கேரியரை அழித்து கொண்ட சம்பவமும் நடந்து இருக்கிறது.

தம்பி ராமையா இயக்கத்தில் மாணிக்கம் நாராயணன் தயாரித்த திரைப்படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன்.  காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஹீரோவாக நடித்ததில் முக்கிய திரைப்படம். நாயகனாக நடித்த முதல் பெரிய ஹிட் கொடுத்த நிலையில் முதலில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படிங்க: வியாபாரம் இல்லைங்க! ‘கோட்’ பட ஆடியோ லாஞ்சில் இப்படி ஒரு பிரச்சினையா?

இப்படத்தில் வடிவேலு மூன்று வேடத்தில் நடித்து இருப்பார். ஆனால் முதலில் எமதர்மன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் தான் நடிப்பதாக இருந்தது. வடிவேலுவோ அதெல்லாம் முடியாது நான் தான் நடிப்பேன் என மல்லுக்கட்டி மூணு ரோலிலும் அவரே நடித்தார். படத்தின் படப்பிடிப்பு பாதியில் எடிட்டிங் சென்றதாம். எடிட்டர் தயாரிப்பாளரிடம் படத்தில் காமெடியே இல்லை என தகவல் செல்லுகிறார்.

வடிவேலுவிடம் இதுகுறித்து கேட்ட போது, முதலாளி படம் பிரம்மாண்டமா வந்து இருக்கு. ஆனா காமெடி இல்ல. எமலோகத்தில் செட் போட்டு அங்க காமெடி காட்சிகளை வைத்துக்கொள்ளலாம் என்றாராம். அந்த காட்சிகளும் வந்தது. தற்போதும் அதே பிரச்னை காமெடியே இல்லாமல் காமெடி படமா என தயாரிப்பாளர் கவலையாகி விடுகிறார். 

இதையும் படிங்க: இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!…

சரி படம் ஓடாது என முடிவெடுத்த தயாரிப்பாளர் அதன் இமேஜை கொஞ்சமாது கூட்டணுமே என யோசிக்க ஸ்ரேயாவை ஒற்றை பாட்டுக்கு ஆட வைக்க முடிவெடுக்கிறார். உதவியாளரை வைத்து ஸ்ரேயா கால்ஷூட் வாங்கிவிடுகின்றனர். ஸ்ரேயாவும் ஒப்புக்கொண்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்தாராம். அதே நேரத்தில் கந்தசாமி படத்தில் ஸ்ரேயா முன்னணி நடிகையாக நடித்து வந்தார். அந்த படமும் ஹிட்டானது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு ஆடியதே அவர் கேரியரை மொத்தமாக காலி செய்துவிட்டது. இதனால் அவர் சினிமா  வாழ்க்கை தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily