சித்தா படத்துக்காக விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த்துக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்ட நிலையில், மைக்கை பிடித்து கொண்டு பேசியவர் அனிமல் படத்தை மறைமுகமாக தாக்கியது தெலுங்கு சினிமா ரசிகர்களை பயங்கர கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. தயாரிப்பாளரான சித்தார்த்துக்கு ஓரளவு வசூல் கிடைத்தது. ஆனால் அதே ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
இதையும் படிங்க: இனிமே டாக்டர் ராம்சரண்!.. சென்னை பல்கலைக் கழகத்தில் சிரஞ்சீவி மகனுக்கு கிடைத்த அங்கீகாரம்!..
இந்த படம் எப்படி அவ்வளவு வசூலை ஈட்டும் என்கிற பொறாமை சினிமாவிலேயே பலருக்கும் ஏற்பட்டது. பல பிரபலங்கள் அனிமல் படத்துக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தை பார்த்த பெண்கள் ஒருவர் கூட அந்த படம் எங்களை முகம் சுளிக்க வைக்கவில்லை, பார்க்க முடியாமல் செய்யவில்லை என சொல்லவே இல்லை. ஆனால், என்னிடமும் இயக்குனர் அருணிடமும் பல ஆண்கள் சித்தா படத்தை பார்க்க முடியவில்லை, ஒரு மாதிரி பண்ணியது என்றனர்.
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரிடம் சவால் விட்டு ஜெயித்த கோவை சரளா!.. சும்மா சொல்லி அடிச்சிருக்காங்களே!..
அந்த ஆண்களால் மிருகம் என டைட்டில் வைத்த படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றியடைய வைக்க முடிகிறது. சித்தா படத்தை பார்க்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஷேம் தான் காரணம் என பேசியுள்ளார்.
நடிகர் சித்தார்த் இப்படி பேசியதை பார்த்த சந்தீப் ரெட்டி வங்கா ரசிகர்கள் பாய்ஸ் படத்தில் ஆடையில்லாமல் நடுரோட்டில் சித்தார்த் ஓடியது எல்லாம் மறந்து போச்சா என்றும் பிளேபாயாக பல படங்களில் நடித்தவர், சித்தா என்னும் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு சித்தர் மாதிரி பேச வேண்டாம் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னங்க ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸா… சிங்கம் படத்தில் இது நடக்க இருந்தது… ஆனா ஜஸ்ட்டு மிஸ்ஸு..
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…