×

வல்லவன் வெளியாகி 14 வருடங்கள்... தெறிக்கவிட்ட சிம்பு ரசிகர்கள்... அதிரும் இணையதளம்

 

நடிகர் சிம்பு நடித்து, இயக்கிய திரைப்படம் வல்லவன். 2006ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ரீமாசென் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடிக்கும் போதுதான் சிம்புவுக்கும், நயனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் சிம்புவின் ரசிகர்கள் #14yearsofOurVALLAVAN  என்கிற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். ஏறக்குறைய 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர்.


  

From around the web

Trending Videos

Tamilnadu News