simbu hansika
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ‘மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் . அதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
simbu hansika
அதன் பின் அல்லு அர்ஜூனுடன் தான் முதலாக ஜோடியாக ஆனார் ஹன்சிகா. இப்படி பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வர தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் திருமணம் நடந்து தேனிலவு எல்லாம் முடிந்து ரசிகர்களையும் சந்தித்தார் ஹன்சிகா.
இதனிடையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று ஹன்சிகாவை பேட்டி எடுத்தப் போது திருமணத்திற்கு முன் தன் வாழ்க்கை எப்படி இருந்தது என கூறியிருக்கிறார். அப்போது ஹன்சிகாவிடம் ‘நடிகர் சிம்புவை காதலித்து அதன் பின்னர் பிரிந்து இரண்டாவதாக இன்னொருவரை ஏற்றுக் கொள்ள கஷ்டப்பட்டீர்களா?’ என்று கேட்டிருந்தனர்.
simbu hansika
அதற்கு பதிலளித்த ஹன்சிகா ‘ஆமாம், எனக்கு அதிலிருந்து விடுபட பல ஆண்டுகள் தேவைப்பட்டது, மேலும் இன்னொருவரை தேர்ந்தெடுக்க 7 முதல் 8 ஆண்டுகள் ஆனது’ என்றும் பதிலளித்திருக்கிறார். மேலும் அவர் கூறும் போது ஹன்சிகாவிற்கு காதல் மீது அதிக நம்பிக்கை உண்டாம். அதுமட்டுமில்லாமல் யாரை அதிகம் நேசிக்கிறாரோ அதை அவரிடம் வெளிப்படையாக காட்ட மாட்டாராம்.
மேலும் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய நிறைய நாள்கள் தேவைப்பட்டதாகவும் அவரின் காதலின் நம்பிக்கையை உணர்ந்தே சோஹைல் அவர் மீது அதிக காதல் வைத்திருந்ததாகவும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் ஹன்சிகா. அதன் பின் செய்தியாளர்கள் ‘முன்னாள் உறவில் இருந்து எதுவும் கற்றுக் கொண்டீர்களா?’ என்று கேட்டார்கள்.
hansika sohail
அதற்கு ஹன்சிகா ‘அப்படி எதுவும் இல்லை,அந்த உறவு வேறு. அது முடிந்து விட்டது. இப்போது உள்ள உறவு வேறு’ என்று கூறினார். சிம்புவும் ஹன்சிகாவும் ‘வாலு’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே நெருக்கம் இருப்பதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் அதெல்லாம் முடிந்து விட்டது என ஹன்சிகா மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : திருமண நாளன்று நடந்த துக்கம்!.. மெய்சிலிர்க்க வைத்த சிவாஜி!.. இப்ப யாராச்சும் அப்படி இருக்காங்களா?..
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Kantara 2…