திருமண நாளன்று நடந்த துக்கம்!.. மெய்சிலிர்க்க வைத்த சிவாஜி!.. இப்ப யாராச்சும் அப்படி இருக்காங்களா?..
தமிழ் சினிமாவில் நடிப்புப் பல்கலைக் கழகமாக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடக மேடைகளில் தனது திறமையை காட்டி வந்த சிவாஜி பராசக்தி திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
பராசக்தி படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கலைஞர் எழுதிய வசனம் தான். அந்த வசனம் தான் இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. சிவாஜி என்றாலே முதல் மக்கள் மனதில் எழுவது கலைஞரின் வசனத்தில் பேசிய அந்த காட்சி தான்.
அதன் பிறகு அவரின் புகழ் வானுளவு உயர்ந்தது. நடிப்பு அரக்கனாகவே மாறினார் சிவாஜி. புராணக்கதைகள், குடும்பப் பாங்கான கதைகள், காப்பியம் சம்பந்தமான கதைகள், வரலாற்றுக் கதைகள் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார் சிவாஜி.
அவருக்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஒய்.ஜி. மகேந்திரன். அவரின் நாடகங்களை பார்த்து தான் ஒய்.ஜி.யும் சினிமாவிற்குள் நுழைந்தார் என்று ஒய்.ஜி.யே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
ஏன் தன் உருவம் பதித்த தங்கச் சங்கிலியை சிவாஜி ஒய்.ஜிக்கு கொடுக்க இப்ப வரைக்கும் ஒய்.ஜி. தன் கழுத்தில் அணிவித்திருக்கிறார். மேலும் ஒய்.ஜி.யின் அப்பாவான பார்த்தசாரதி மீது சிவாஜிக்கு ஏகப்பட்ட மரியாதை இருந்திருக்கிறது. 1991 ஆம் ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஒய்.ஜி. யின் தந்தை காலமாக அந்த நேரம் ஒய்.ஜி. நாடக அரங்கேற்றத்திற்காக தூத்துக்குடி சென்றிருந்தாராம்.
இதையும் படிங்க : அட்டர் ஃப்ளாப் ஆனாலும் அந்த விஷயத்தில் முரண்டுபிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரில…
மறுநாளான மே 1 ஆம் தேதி சிவாஜியின் திருமண நாள் என்பதால் சிவாஜியின் வீட்டில் ஒரு ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த மறைவு செய்தியை கேட்டு உடனே சிவாஜி அந்த ஹோமத்தையும் தவிர்த்து அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார். மேலும் ஒய்.ஜி. தூத்துக்குடியில் இருந்து வரும் வரைக்கும் சிவாஜியே உடன் இருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொண்டாராம்.