நீண்ட வருடங்கள் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது மாநாடு. இது சிம்புவுக்கு ஒரு கம்பேக் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்துக்கு மங்காத்தா எனும் மிக பெரிய சம்பவத்தை செய்தது போல , சிம்புவுக்கு மாநாடு எனும் சம்பவத்தை சிறப்பாக செய்து இருந்தார் என்றே கூற வேண்டும்.
இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு, சிம்பு பட கேரியரில் மிகப்பெரிய வசூலை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்த திரைப்படமாகவும் இந்த திரைப்படம் அமைந்தது.
தற்போது இதுவே ஒரு சிக்கலாக சிம்புவின் அடுத்த படத்திற்கு இருக்கிறதாம். சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயனுக்கு ஜிம் பீஸ் கட்டிய தனுஷ்.! எப்படியெல்லாம் வளர்த்து விட்டுருக்கார் பாருங்க…
தற்போது இந்த படத்தின் படக்குழு சற்று பீதியில் இருக்கிறார்களாம். அதாவது, இந்த படத்தை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள், மாநாடு திரைப்படம் அளவுக்கு இல்லை என்று ஒரு வார்த்தை கூறி விட்டாலே, படத்தின் ரிசல்ட் கடுமையாக பாதிக்கப்படும். என்று சிறிய பயத்தில் இருக்கின்றனராம்.
மாநாடு பட அளவுக்கு இந்த படமும் பெயர் வாங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த திரைப்படம் லாபம் தந்த திரைப்படமாக அமையும் என்று சற்று கலக்கத்தில் இருக்கின்றனராம் வெந்து தணிந்தது காடு படக்குழு.
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…