Categories: Cinema News latest news

வரேன்…. திரும்ப வரேன்… வெறிக்கொண்டு தாக்கும் சிம்பு – மாநாடு ட்ரைலர்!

நடிகர் சிம்புவின் மாநாடு ட்ரைலர்!

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு நடித்துள்ளார். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் வில்லன் ரோலில் நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கேரக்ட்ரில் நடித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகிறது.

இதையும் படியுங்கள்: முதல் வைல்ட் கார்டு என்ட்ரி… துள்ளி குதித்த பிரியங்கா – யாரு தெரியுமா?

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியாகுமா வெளியாகாத என்ற சதேகத்திற்கு இடையில் வெற்றிகரமாக முடிந்து ரிலீஸை நோக்கி காத்திருப்பதே ஒரு வித வெற்றியாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய ட்ரைலர் யூடியூபில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்