இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “விண்ணை தாண்டி வருவாயா”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் வரும் ஒரு ஒரு காட்சிகளையும் கெளதம் மேனன் செதுக்கி வைத்திருப்பார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். இந்த திரையரங்கில் விண்ணை தாண்டி வருவாயா படம் கடந்த மார்ச் மாதம் இறுதியில் ரீ ரிலீசாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்- பொன்னியின் செல்வனை பாகுபலியோட கம்பேர் பண்ணாதீங்க!… ஏன் தெரியுமா?…..
படம் கடந்த 2010-ஆம் ஆண்டே வெளியானால் கூட மீண்டும் இந்த ஆண்டு ரீ ரிலீசான பிறகும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க சென்னை பிவிஆர் திரையரங்கிற்கு வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம் 120 நாட்களுக்கு மேலாகி இன்னும் அந்த திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படம் ரீ ரிலீசாகி 120 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் என்ற சாதனையை விண்ணை தாண்டி வருவாயா படம் படைத்துள்ளது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…