Categories: Cinema News latest news throwback stories

முன்னணி நடிகர்களுடன் காதல் வலையில் சிம்ரன்.. எல்லாமே ப்ரேக் அப்பில் முடிந்த பரிதாபம்…

Simran: தமிழ் சினிமா நடிகைகளில் அதிக காதல் தோல்வியை சந்தித்த லிஸ்ட்டில் நயன்தாராவுக்கு முன்னால் நடிகை சிம்ரன் இணைந்துவிட்டார். அவர் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தான் என்பது ஆச்சரியமான தகவல்.

கன்னடா மற்றும் தெலுங்கில் நடிகையான பின்னரே தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். விஐபி மற்றும் நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தார். இதில் நேருக்கு நேர் திரைப்படம் அவருக்கு சினிமா கேரியரை ஒரு பக்கம் உயர்த்தியது.

இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

அதே நேரத்தில் விஐபி திரைப்படத்தில் அப்பாசுடன் இணைந்து நடிக்க காதல் முளைத்தது. பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி வர விரைவில் திருமணம் கூட செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுத்தனர். ஆனால் கடைசியில் அப்பாஸ் தன்னுடைய கேரியருக்கு பயந்து சிம்ரனை கழட்டி விட்டாராம்.

அதனை தொடர்ந்து நடிகை சிம்ரன் காதலில் சிக்கியது கமல்ஹாசனுடன் தான். பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க காதல் தீ பத்திக்கொண்டதாம். நடிகர்கள் நடத்திய உண்ணாவிரத நிகழ்வில் கூட சிம்ரனை தன் காரில் அழைத்து வந்தார் கமல்ஹாசன். லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தவர்களுக்கு கருத்து வேறுப்பாடு ஏற்பட அந்த காதலும் முறிந்தது.

இதையும் படிங்க: அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..

அதில் மிகவும் சிம்ரன் மனமுடைந்தது போய்விட்டாராம். இதனால் அடுத்த வருடமே தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து பெரிய ப்ரேக் எடுத்தார். மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி இருக்கும் சிம்ரன் கேரக்டர் ரோலில் முழு வீச்சாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily