Connect with us

Cinema News

மீண்டும் மீண்டுமா? மறுபடி ஹீரோவை காலி செய்ய காத்திருக்கும் சிறகடிக்க ஆசை!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து நின்று காசு வந்த விஷயம் குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். நண்பர்கள் மீனா சொன்னது தான் சரி என்கின்றனர். இந்த நேரத்தில் ஜோசியர் ஒருத்தர் அங்கு வருகிறார். முத்துவுக்கு ஜோசியம் சொல்ல வர அவர் தடுத்துவிடுகிறார்.

காசு கொடுத்து டீ சாப்பிட அனுப்ப பார்க்க அவர் ஜக்கம்மா உன்னிடம் சொல்ல சொன்னதாக கூறுகிறார். நண்பர்கள் கையை காட்டுப்பா எனக் கூற இன்னைக்கு ரொம்ப சூதானமா இருக்கணும். இல்லனா ஊர் ஏசும் இடத்துக்கு நீ வந்துடுவ என்கிறார். அவர் போனதும் முத்துவுக்கு மினிஸ்டரிடம் இருந்து கால் வருகிறது.

இதையும் படிங்க: பேனர் கிழிக்கத்தான் தெரியும்!.. பாக்ஸ் ஆபிஸில் கில்லியை தொடக் கூட முடியாத தீனா மற்றும் பில்லா!..

அடுத்ததாக, மீனா அம்மாவை பார்க்க வீட்டுக்கு வருகிறார். அப்போ சிட்டியுடன் வந்து சத்யா இறங்குகிறார். என் தம்பிக்கூட உனக்கு என்ன பேச்சு எனக் கேட்டு அடிக்கப் போகிறார். சத்யா மீனாவிடம் சண்டைக்கு வருகிறார். பின்னர் சிட்டி அக்கா தானே எனக் கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

மறுபக்கம் மனோஜ் கார் வாங்கலாம் என்று ஒரு ஏஜென்சிக்கு வருகிறார். அங்கு பார்த்து ஒரு காரை செலக்ட் செய்து வாங்கிவிடுகிறார். முத்து மினிஸ்டரை பார்க்க அவர் நண்பர் என ஒருவரை அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் ஆந்திராவில் இருந்து வந்து இருப்பதாகவும் கார் வாங்கணும் எனவும் கூறுகிறார்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பயில்வான்!..

உடனே முத்து எனக்கு ஏஜென்சி தெரியும். அங்கு தான் என் காரையும் வாங்கினேன் என அழைத்து செல்கிறார். ரோகிணியை அழைக்கும் மனோஜ் கார் குறித்து கூற அவர் முதலில் வேண்டாம் என்றாலும் பின்னர் சரியென ரேட் பேசலாம் எனச் செல்கிறார். அடுத்ததாக, முத்து மினிஸ்டரையும், அவர் நண்பரையும் அழைத்து வந்து காரை காட்ட அவர்கள் நிறைய காரை வேண்டாம் எனக் கூறிவிட்டு மனோஜ் செலக்ட் செய்த காரை ஓகே செய்கின்றனர்.

ஆனால் புது பணக்காரர் இந்த காரை ஓகே செய்து இருப்பதாக ஓனர் கூறுகிறார். அவர்களிடம் பேசி பார்க்கலாம் என முத்து செல்ல மனோஜ் மற்றும் ரோகிணி எனத் தெரிய வருகிறது. இவனா பணக்காரன். இவனுக்கு வேலை கூட கிடையாது. இஎம்ஐ கூட கட்டமாட்டான் காரை எடுத்துக்கிட்டு ஓடிடுவான் என்கிறார். இதனால் காரை மினிஸ்டரின் நண்பருக்கே கொடுத்துவிடுகின்றனர். மனோஜ் மற்றும் ரோகிணி பயங்கர கோபத்துடன் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Continue Reading

More in Cinema News

To Top