Categories: Cinema News latest news throwback stories

சிவாஜி படத்தால் கடுப்பான படக்குழு!… அதையே படத்தலைப்பாக்கிய தயாரிப்பு நிறுவனம்!..

Sivaji Ganesan: ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ஒரு படத்துக்கு டைட்டிலே கிடைக்காமல் கடைசியில் ரசிகர்கள் சொல்லை வைத்தே அந்த படத்துக்கு டைட்டில் ரெடி செய்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த திரைப்படம் பச்சை விளக்கு.  செளகார் ஜானகி, நாகேஷ், விஜயகுமாரி, எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதலில் இப்படம் 8000 அடி ஷூட் செய்யப்பட்டு விட்டதாம். ‘

ஆனால் அது மெய்யப்ப செட்டியாருக்கு பிடிக்காமல் போக அதை எறித்துவிட்டு வேறு கதையை இதே கதாபாத்திரத்தினை வைத்து ஷூட் செய்யுங்கள் எனக் கூறி இருந்தாராம். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இப்படத்திற்கு இசை அமைத்து இருந்தனர். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: 70 கேமரா முன்னாடி தான பேசுன!.. நிக்‌ஷனை கிழித்து தொங்க விட காத்திருக்கும் வினுஷா!..

முதலில் இப்படத்தின் டைட்டிலே கிடைக்கவே இல்லையாம். இப்போது சாதாரணம். அப்போது டைட்டில் வைத்த பிறகே ஷூட்டிங்கே தொடங்கும். ஆனால் இந்த படத்தின் பாதி படப்பிடிப்பே முடிந்த பிறகும் கூட என்ன பெயர் வைக்கலாம் எனப் படக்குழு யோசித்து கொண்டே இருந்தனர்.

அந்த நேரத்தில் எம்.சரவணன் ஸ்டுடியோவுக்கு சென்று கொண்டு இருந்த போது அவருக்கு ஒரு ஐடியா கிடைத்ததாம். படத்தின் டைட்டிலை ரசிகர்களை வைத்தே வாங்கினால் எப்படி இருக்கும் என்பது தான் அது. ரயில் நிலையம் அருகே மூன்று விளம்பரப் பேனல்கள் வாடகைக்கு எடுக்கிறார். அவற்றில் க்ரீன் சிக்னலுடன் ‘சிவாஜி நடிக்கும்’ மற்றும் ‘விரைவில்’ என்ற வாசகங்கள் மட்டுமே இருந்தன. இதை பார்த்து சென்ற ரசிகர்கள் சிவாஜி படமா என்ன பெயரே இல்லை எனக் குழம்பி இருக்கின்றனர்.

ஒரு சிலரோ என்ன வெறும் பச்ச விளக்கு மட்டும் இருக்கு பேசிக்கொண்டது பெரும் சலசலப்பை உருவாக்கியதாம். இது படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று படக்குழுவினர் விவாதத்தில் நுழைந்ததாம். அப்போதுதான் இயக்குநர் பீம் சிங் சார், க்ரீன் சிக்னலுக்காக பார்வையாளர்கள் வெறித்தனமாகப் போனதால்… ‘பச்சை விளக்கு’ என்ற பெயரே வைத்து விடலாம் என்றாராம். 

இதையும் படிங்க: வடிவேலு வீட்டு பக்கம் போனால் போலீஸ் கிட்ட போவேன்… கடும் கோபம் காட்டிய விஜயகாந்த்!..

Published by
Shamily