Categories: Cinema News latest news

யோகிபாபுவை புறக்கணித்த சிவகார்த்திகேயன்.. பின்ன யாரா இருந்தா என்ன?!.. அடிச்ச அடி அப்படி!

யோகிபாபு தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தனது காமெடிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.  இவர் யோகி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தனது விடாமுயற்சியினால் தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் பல முன்னணி நட்சத்திரங்களோடு பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…

பின் வேலாயுதம், அரண்மனை  போன்ற பல திரைப்படங்களில் தனது காமெடிகளின் மூலம் ரசிகர்களை பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மண்டேலா, கூர்கா போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னை கதாநாயகனாகவும் காட்டினார் நடிகர் யோகிபாபு.

இவர் நிஜ வாழ்வில் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். காக்கிசட்டை, மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களின் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:ரேட்டிங்காக வாழ்க்கையோட விளையாடுறதா? பிக்பாஸில் பத்திக்கிட்டு எரியும் சம்பவம் – நினைச்சத சாதிச்சிட்டாங்கே

சமீபத்தில் நடிகர் யோகிபாபு தனது மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னணி நட்சத்திரங்கள் பலர் அழைக்கப்பட்டனர். நடிகர் சூர்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்நிகழ்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவில்லையாம். ஆனால் அவர் வருவதாய் திட்டமிட்டுதான் வைத்திருந்தாராம். ஆனால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்த இமானின் குற்றசாட்டினால் எங்கு பிறந்த நாளுக்கு தான் வந்தால் பத்திரிக்கையாளர்கள் இமான் குறித்த பல கேள்விகளை கேட்பார்களோ என எண்ணி இந்நிகழ்ச்சிக்கு வருவதை ரத்து செய்துவிட்டாராம். இதனால் யோகிபாபு சிவகார்த்திகேயன் மீது கடும் வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிங்க:லியோ படத்தில் நீ இருப்பியாமா… அனுராதா மகன் ஆசையாக கேட்ட விஷயம்.. ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்டே..!

amutha raja
Published by
amutha raja