தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு போட்டியாக தற்போது வளர்ந்து வரும் நடிகர்ளில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்பட வசூல்களும், இவரது சம்பளமும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
இவர் நடிப்பில் அடுத்தடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது. தற்போது இவரை பற்றி வேறொரு செய்தி கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதாவது, இவர் பிரபல யூ-டியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் என்றும், அதில் அதிக பட்ச ஷேர் இவருடையது தான் என்றும் தகவல் கசிந்து வருகிறது. மேலும், அந்த யு-டியூப் சேனலுக்கு சொந்தமாக ஒரு ஓடிடி தளமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்களேன் – ஒரு காருக்குள் பாடாய் படும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான திகிலூட்டும் திரில்லர் வீடியோ..
மேலும், அந்த ஓடிடி நிறுவனத்திற்கு வரும் திரைப்படங்களுக்கு உரிமை கோரும் படிவத்தில் கையெழுத்து போடும் முக்கிய நிர்வாகியாக சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இருக்கிறாராம். இதனை அண்மையில் பிரபல பத்திரிகை சேனல் வலைப்பேச்சு தளம் கூறியிருக்கிறது.
இதனை அறிந்ததும் நெட்டிசன்கள் அந்த youtube சேனல் என்னவாக இருக்கும், யூடியூப் சேனலோடு ஓடிடி தளம் வைத்திருக்கும் அந்த ‘கருப்பு ஆடு’ யார் என்று இணையத்தில் துலாவி வருகின்றனர்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…