Categories: Cinema News latest news

துவண்டுபோன ஹாரிஸ்.! கை கொடுத்த சிவகார்த்திகேயன்.! ‘காரசார’ பின்னணி.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். இவரது, நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தியேட்டர்களுக்கு பெரிய நஷ்டத்தை விளைவித்தது இல்லை. அதே போல், அடுத்தடுத்த திரைப்படங்களும் நல்ல வெற்றியை பதிவு செய்து வருகின்றன.

இவரது, ஆரம்ப காலத்தில் இவரது  திரைப்படங்களுக்கு கிராமத்து பின்னணியில் அமைந்தால் இமான் நகரத்து பின்னணியில் அமைந்தால் அனிரூத் என மாறி மாறி பணியாற்றி வந்தார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா எனும் திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடலை இமான் கொடுத்திருந்தார். இருந்தாலும், அடுத்தது திரைப்படங்களில் அனிருத்துக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தார் சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் ஏ ஆர் ரகுமான் உடனும் கை கொடுத்தார்.

இதன், காரணமாக சிவகார்த்திகேயனுக்கும் இசையமைப்பாளருமான இமானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படியுங்களேன்- இவர நம்பி எல்லா படமும் போச்சே!… தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் சூரி….

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தை ரங்கூன் படத்தை எடுத்த இயக்குனர் இயக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு காலத்தில் இறைவனுக்கு போட்டியாக கருதப்பட்டு  வரும் ஆனால் தற்போது பெரிய படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் துவண்டிருந்த அவருக்கு தற்போது சிவகார்த்திகேயன் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan