தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களை திரட்டும் முயற்சியில் பக்காவாக ஈடுபட்டு வருகிறார் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரமே திகைத்துப் போய் நிற்கும் அளவுக்கு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பண்ண அதே வேலையை பார்த்தால் தான் நம்ம படம் வெளியாகும் போது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள் என்றும் அமைதியாக இருந்தால் அயலான் படத்துக்கு ஆன நிலைமை தான் அடுத்து அமரன் படத்துக்கும் ஆகிவிடும் என்பதால் ரசிகர்களை சேர்க்க ஆரம்பித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: கழட்டி விட்டாலும் நண்பனை மறக்கலயே!.. லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாழ்த்து சொன்னது யாருன்னு பாருங்க!..
ரசிகர்களுடன் ரசிகராக களமிறங்கி செல்ஃபி போட்டோக்களை எடுத்துக் கொள்வது, ரசிக மன்ற நிர்வாகிகளை அழைத்து பிரியாணி போடுவது என அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறாராம்.
பல நடிகர்கள் சினிமாவில் நடிப்பது, ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது என்று மட்டுமே இருந்து வரும் நிலையில் தான் கொஞ்ச காலத்தில் காணாமல் போய் விடுகின்றனர். யார் ஒருவர் ரசிகர்களை கவர்கிறாரோ அவர் தான் அடுத்த தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார் என முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரமாக இருக்க முடியும் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு தான் சிவகார்த்திகேயன் இது போன்ற வேலைகளை இப்போ படுஜோராக ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.
இதையும் படிங்க: பிரசாந்த் இத மட்டும் செய்யவே மாட்டார்.. ‘கோட்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்! நல்ல ஒரு கொள்கை
அமரன் படத்திற்கு எதிராக ஏற்கனவே சர்ச்சை வெடிக்க ஆரம்பித்த நிலையில் தான் பயம் வந்து அந்த படம் அவுட் ஆனால் அவ்வளவு தான் என நினைத்து விட்டார் சிவகார்த்திகேயன் எனக் கூறுகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…