கழட்டி விட்டாலும் நண்பனை மறக்கலயே!.. லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாழ்த்து சொன்னது யாருன்னு பாருங்க!..

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கடந்த சில ஆண்டுகளில் ஜாவா சுந்தரை விட அதிவேகத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

எப்படி அட்லீ ராஜா ராணிக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கி பின்னர் ஷாருக்கானை இயக்கினாரோ அதே போல நெல்சன் நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஜய் மற்றும் ரஜினி படங்களை வரிசையாக இயக்கி முன்னேறினாரோ லோகேஷ் கனகராஜும் இதே ஃபார்முலாவில் வெற்றிக் கண்டவர் தான்.

இதையும் படிங்க: பிரசாந்த் இத மட்டும் செய்யவே மாட்டார்.. ‘கோட்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்! நல்ல ஒரு கொள்கை

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ அடுத்து தலைவர் 171 என சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 1986ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பிறந்த லோகேஷ் கனகராஜ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மாஸ்டர் படத்தில் இருந்து அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் அடுத்து தலைவர் 171வது படத்தில் பணிபுரியவில்லை என கழட்டிவிடப்பட்ட நிலையிலும் தனது நண்பனை மறக்காமல் முதல் ஆளாக வாழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு வேண்டும்!.. உடனே வேண்டும் என விஜய் ஆண்டனி என்ன கேட்கிறார் பாருங்க.. ரோமியோவாவே மாறிட்டாரே!..

விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நிச்சயம் லோகேஷ் கனகராஜுக்கு இன்று போன் மூலம் வாழ்த்துக்களை சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 படத்தை தொடர்ந்து கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 என கைவசம் பல படங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் 10 படங்களுக்கு மேல் இயக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

லியோ படத்தின் பிளாஷ்பேக் சொதப்பல்களுக்கு ரத்னகுமார் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் அவர் பேசியது ரஜினிக்கு எதிரான பதிலடி போல இருந்ததாக ரசிகர்கள் டிரெண்ட் செய்த நிலையில், தலைவர் 171 படத்தில் லோகேஷுடன் பயணிக்காமல் புதிய படத்தை இயக்க கடுமையாக உழைத்து வருகிறார்.

 

Related Articles

Next Story