Connect with us

Cinema News

எனக்கு வேண்டும்!.. உடனே வேண்டும் என விஜய் ஆண்டனி என்ன கேட்கிறார் பாருங்க.. ரோமியோவாவே மாறிட்டாரே!..

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி நடிப்பில் உருவாகி வரும் ரோமியோ படத்தின் பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. “வெத்தலை வெத்தலை பெரிய வெத்தலை” என பாடல் முழுவதுமே டபுள் மீனிங் வரிகளுடன் விஜய் ஆண்டனி எழுதி பாடியிருக்கிறார்.

உடல் எடையை எல்லாம் குறைத்து செம ஸ்லிம்மாக தோற்றமளிக்கிறார். மிருணாளினி ரவி தான் விஜய் ஆண்டனிக்கு அக்கா போல வயதாகி தெரிகிறார். இன்னும் புதுமுக நடிகையை போட்டிருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அஜித் ரசிகர்கள் அட்டண்டன்ஸ் போட வாங்க!.. இந்த முறை மிஸ் ஆகாது.. விடாமுயற்சி அப்டேட் எப்போ தெரியுமா?

வெத்தல வெத்தல பாடல் வீடியோவில், “எனக்கு வேண்டும்.. உடனே வேண்டும்” என விஜய் ஆண்டனி அடிக்கடி மிருணாள் ரவியை பார்த்து கேட்கும் காட்சிகள் எல்லாம் பார்க்கவே தாறுமாறாக உள்ளது. இளைஞர்களின் சூப் பாடல் வரிசையில் இது ஒரு டக்கரான பாடலாக அமையும் என தெரிகிறது.

விஜய் ஆண்டனிக்காக போடப்பட்ட ஸ்லோ பீட் ஸ்டெப்களை பார்த்தாலே சிரிப்பு தானாக வந்து விடும். இப்படியொரு பாடலுக்கு விஜய் ஆண்டனிக்கு இதுக்கு மேல கொரியோகிராஃபி செய்ய முடியாது என நினைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது.

இதையும் படிங்க: அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

கடந்த ஆண்டு விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீள தொடர்ந்து இசை கச்சேரிகளையும், ரோமியோ படத்தில் படு ரொமாண்டிக்காகவும் விஜய் ஆண்டனி ஜாலியாக நடித்து வருகிறார் என்றே தெரிகிறது.

வரும் ரம்ஜானுக்கு ரோமியோ படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு கை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top