Connect with us
sivakarthikeyan

latest news

சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் முதுகில் பல பேர் குத்தியிருக்கிறார்கள்! பிரபலம் சொன்ன தகவல்

தற்போது விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக அனைவரும் பெரிய அளவில் பேசக்கூடிய நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு எல்லாத்துக்கும் காரணமே அவர் நடித்த அமரன் திரைப்படம் தான். அந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே சிவகார்த்திகேயன் வாழ்ந்து இருந்தது தான் அனைவருக்குமான ஒரு பிரமிப்பு.

அதிலிருந்து அவருடைய வளர்ச்சி இன்னும் உயரத்திற்கு சென்று விட்டது. சமீபத்தில் கூட டிரெயினிங் ஆபிசர் அகாடமியில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு சிறந்த அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது .அதைப்போல மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து அவருடைய மரியாதையை செலுத்தி இருந்த புகைப்படமும் வைரலானது.

இதையும் படிங்க: ஓடியாங்க ஓடியாங்க!.. ஓடிடியில் ரிலீஸாகும் அமரன்.. இதோ தேதிய குறிச்சு வச்சுக்கோங்க!..

இப்படி அமரன் திரைப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது .சின்ன திரையில் எங்கேயோ இருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் தனுஷ். அடித்தளம் போட்டு கொடுத்தவர் அவராக இருந்தாலும் அதன் பிறகு தனக்கான ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொறுப்பு சிவகார்த்திகேயனுக்கு இருந்தது.

அதை இன்றுவரை சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது சிவகார்த்திகேயனுக்கு சரியாக பொருந்தும். அந்த அளவுக்கு தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார். இயக்குனர்களை தேர்வு செய்யும் முறையும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இனிமேல் அவருடைய சினிமாக் கெரியர் ஒரே ஆறுமுகமாகத்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவருடைய கருத்தை சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் .அதாவது சிவகார்த்திகேயன் மிகவும் போராடி அடிமட்டத்திலிருந்து வந்ததனால் சிலர் அவரின் வளர்ச்சியை பிடிக்காமல் அவர் முதுகில் பலபேர் குத்தி இருக்கிறார்கள்.

siva

siva

இதையும் படிங்க: யாரு ஹீரோன்னே தெரியல!.. ஒரு டிவிஸ்ட்டும் இல்ல!.. சொர்க்கவாசலுக்கு புளூசட்டை மாறன் விமர்சனம்!..

இருந்தாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் கதை தான் முக்கியம் என பல்வேறு ஜானரில் இப்போது அமரன் போன்ற நானூறு கோடி ஹிட் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நம்மைச் சுற்றி பல பேர் ஜால்ரா அடித்து கொண்டிருந்தாலும் நீ தான் அடுத்த சிஎம் ,நீ தான் அடுத்த தலைவர் என எத்தனையோ பேர் சொல்லி இருந்தாலும் அதை எதையும் காதில் வாங்கி போட்டுக் கொள்ளாமல் நல்ல கதையை தேடி தனது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top