ஓடியாங்க ஓடியாங்க!.. ஓடிடியில் ரிலீஸாகும் அமரன்.. இதோ தேதிய குறிச்சு வச்சுக்கோங்க!..

by ramya suresh |
amaran
X

amaran

அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: நயன் – விக்கி காதலுக்கே நான்தான் காரணம்!.. ரகசியத்தை லீக் செய்த மிர்ச்சி சிவா!…

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. மேலும் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

உலகம் முழுவதும் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம் தற்போது 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு டாப் நடிகர்களின் வசூல் சாதனையையும் முறியடித்து முன்னேறி இருக்கின்றது அமரன் திரைப்படம்.

amaran

amaran

நேற்று ஓவர்சீஸில் மட்டும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அமரன் திரைப்படம் அமைந்திருக்கின்றது. அமரன் திரைப்படத்தின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் ஓடிடி ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை netflix நிறுவனம் ரூபாய் 60 கோடி கொடுத்து வாங்கி இருந்தது.

இதையும் படிங்க: கமலை மரியாதை இல்லாமல் பேசிய ரசிகை… உடனடியாக அஜித் செய்த சம்பவம்

படம் வெளியாகி 4-வது வாரமே netflix-ல் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் படத்தின் வரவேற்பு காரணமாக ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது netflix-சில் அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. திரையரங்குகளில் பட்டையை கிளப்பிய அமரன் திரைப்படம் நிச்சயம் ஓடிடி-யில் புதிய சாதனைகளை படைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story