கமலை மரியாதை இல்லாமல் பேசிய ரசிகை… உடனடியாக அஜித் செய்த சம்பவம்
Ajithkumar: தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் அடிக்கடி தங்களுடைய ரசிகர்களுக்காக ஏதோ ஒன்றை செய்து வைரல் ஆவது வழக்கம். ஆனால் ஒரு நடிகர் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருந்து கொண்டு இருந்தாலும் அவருடைய தரிசனம் கிடைத்து விடாதா என ரசிகர்கள் தவம் இருப்பது ஆச்சரியம் தான்.
அப்படி ஒரு ஆச்சரியத்திற்கு சொந்தக்காரர் நடிகர் அஜித்குமார். எந்தவித பின்புலனும் இல்லாமல் கோலிவுட்டில் அடி எடுத்து வைத்த நடிகர் அஜித்குமார் தனி ஆளாக போராடி தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார். அதற்காக அவர் எங்கும் வளைந்து கொடுத்ததில்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..
சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித்குமார் தற்போது கோலிவுட்டின் அடையாளமாக மாறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மொத்தமாக கலைத்தார். நடிப்பது மட்டும் தான் என் வேலை என்பதால் படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதை மொத்தமாக தவிர்த்தார். கடந்த சில வருடங்களாக அவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை.
பல வருடங்களாக அவருடைய ஒற்றை புகைப்படம் கூட வெளியாவது அரிதான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் மீண்டும் ரேசிங் களத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அது குறித்த தகவலுடன் அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இப்படி செய்தியாளர்களை தவிர்த்து பேட்டிகளை தவிர்த்து இருக்கும் அஜித்குமார் ஒரு காலத்தில் தனக்கு தோன்றும் விஷயங்களை நேரடியாக பேசும் பழக்கம் இருந்தவர். பல பேட்டிகளையும் கொடுத்திருக்கிறார். பேட்டிகளிலேயே தன்னுடைய ரசிகர்களிடம் பேசுவதையும் வழக்கமாக வைத்துக் கொண்டவர்.
இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.
அப்படி ஒரு பேட்டியில் பெண் ரசிகை ஒருவர், கேள்வி எழுப்பும் போது கமல்ஹாசன் என பேரை குறிப்பிட்டு பேச கொஞ்சமும் யோசிக்காமல் கமல்ஹாசன் என குறிப்பிடக்கூடாது கமல் சார் என குறிப்பிடுங்கள் என அவரை உடனே திருத்தினார்.
பொதுவாக பிரபல நடிகர்கள் பொய் முகம் காட்டும் பழக்கத்தை தான் கேமரா முன்னால் பல வருடங்களாக செய்து வருகின்றனர். ஆனால் அஜித்திற்கு அந்த பழக்கம் கிடையாது. தனது தோன்றுவதை நேரடியாக பேசுவதை தான் வழக்கமாக வைத்திருந்தார். இதுவே அவருக்கு பல இடங்களில் பிரச்சனையை உருவாக்க மொத்தமாக மீடியாக்களில் இருந்து விலகினார்.
சில நடிகர்கள் மேடையில் பலர் தேவையில்லாமல் பேசும்போது அதை ஆதரிப்பது போல் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் அஜித்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தற்போது இந்த வீடியோவை இணையதளங்களில் வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.