Categories: Cinema News latest news

இதெல்லாம் நியாயம்தானா சிவகார்த்திகேயன்.?! தளபதி விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!

தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து காதலர் தினத்தை முன்னிட்டு முதல் பாடல் வெளியானது. அரபிக் குத்து என தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அனிருத் இசையமைத்து இருந்த இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடி உள்ளனர். இந்த பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இதுவரை செய்யாத சாதனைகளை முறியடித்து வருகிறது.

இதையும் படியுங்களேன் – 20 வருடத்தில் இரண்டரை மணி நேரத்திலேயே விஜயை சம்மதிக்க வைத்த ஒரே இயக்குனர் இவர்தான்.!

இப்பாடலை பல பிரபலங்கள் தங்கள் இணைய தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். ஆனால், இந்த பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் தற்போது வரை இந்த பாடலை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஆனால், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் இருக்கும் அரபிக் குத்து பாடல் ப்ரோமோ வீடியோவை மட்டும் தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

ப்ரோமோ வீடியோவை பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன் ஏன் முழு பாடலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடவில்லை என்று விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். என்று கூறப்படுகிறது குறைந்தபட்சம் அந்த பாடலுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலம் லைக்கையாவது இட்டு செல்லலாம்.

Manikandan
Published by
Manikandan