Categories: Cinema News latest news Trailer

வெறித்தனமா மாறிய எஸ்.கே!.. வெளியானது அமரன் டைட்டில் டீசர்!.. சும்மா மிரள வைக்குதே!..

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த படமாக ரிலீஸாக இருக்கும் 21வது படத்தின் டைட்டில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாகி இருக்கிறது. வழக்கமாக இல்லாமல் சிவாவின் இன்னொரு ட்ரான்ஸ்வர்மேஷன் மாஸாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். நடிகை சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் இறந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: இதுக்காடா நீ சினிமாவுக்கு வந்த?!. கமலிடம் கோபப்பட்ட ஜெமினி கணேசன்.. நடந்தது இதுதான்..

அதற்காக மும்முரமாக உடலை மெருகேற்றினார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படம் தற்போது ரிலீஸாகி வைரலாகி வருகிறது. தற்போது அப்படத்தின் பெயர் மற்றும் டைட்டில் டீசர் ரிலீஸாகி இருக்கிறது. படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். 30 நொடி ரிலீஸாகி இருக்கும் டைட்டில் டீசரில் முன் எப்போதும் இல்லாத ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சில இடங்களில் புல்லரிக்க வைக்கவும் தவறவில்லை. கண்டிப்பாக இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தினை கொடுக்கும் என்ற பேச்சுகள் இப்போதே எழுந்து இருக்கிறது. படத்தின் டீசரை பார்க்கும் போது முகுந்த் என்ற பெயரில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். பயோபிக்காக இருக்கலாம்.

இதையும் படிங்க: ஆசையாக இருந்த எஸ்.கே.!.. கண்டுக்காம விட்ட லோகேஷ் கனகராஜ்!. தலைவர் படத்துல வாய்ப்பு போச்சே!..

டைட்டில் டீசரை காண: https://www.youtube.com/watch?v=A76db9lX2fE
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily