Categories: Cinema News latest news

விஷாலிடம் இருந்து எஸ்கேப்பான சுந்தர் சி!.. இப்படி வசமா சிவகார்த்திகேயனிடம் சிக்கிட்டாரே!..

இந்த வாரம் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்துக்கு போட்டியாக சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விஷாலுடன் தேவையில்லாமல் மோத வேண்டாம் என நினைத்த சுந்தர் சி அரண்மனை 4 படத்தை மே 3-ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்நிலையில், தற்போது அதே தேதியில் சிவகார்த்திகேயன் படம் வெளியாகிறது.

கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி சினிமாவில் நடிகர் தனுஷ் உதவியுடன் ஹீரோவாக மாறினார். 3 படத்தில் தனுஷ் உடன் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக மாறினார். அந்த படத்தில் நடிகர் தனுஷ் கேமியோவாக வந்து குத்தாட்டம் போட்டிருப்பார்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு எண்ட் கார்டு போடாதீங்க!.. பெரிய மாலை போட்டு விஜய்யிடம் கோரிக்கை வைத்த பிரபலம்!..

சினிமாவிலும் தனது திறமையான நடிப்பால், கடுமையான உழைப்பால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் மாறி எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் உள்ளிட்ட படங்களை தயாரித்த சிவகார்த்திகேயன் தற்போது குரங்கு பெடல் எனும் படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் வரும் மே 3-ஆம் தேதி வெளியாகப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பண்டிகை நாளில் களமிறங்கும் டாப் 5 பேன் இண்டியா திரைப்படங்கள்!.. வெறித்தனமா வரும் வேட்டையன்!..

ஏற்கனவே மே மூன்றாம் தேதி சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தனது படத்தையும் களம் இறக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.

மே 10 ஆம் தேதி கவின் அடித்துள்ள ஸ்டார் மற்றும் சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், வரும் மே மூன்றாம் தேதி அரண்மனை 4 மற்றும் குரங்கு பெடல் ஆகிய படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன.

இதையும் படிங்க: விஜயின் தளபதி69 படத்தினை இயக்க போவது நானா? மேடையில் ஓபனாக உடைத்த பிரபல இயக்குனர்!…

Saranya M
Published by
Saranya M