Connect with us
sivakumar

Cinema News

எம்ஜிஆர் – சிவக்குமாருக்கு இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்ததா? 100வது பட விழாவில் நடந்த சம்பவம்

Actor Sivakumar: தமிழ் சினிமாவில் சுய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழும் நடிகர் என்றால் அது சிவக்குமார்தான். எந்த கெட்டப்பழக்கத்திற்கும் அடிமையாகதவர். சினிமாவில் நடிக்க போகிறேன் என்று தன் பெற்றோரிடம் சொன்ன போது அவரது தாயார் பயந்தாராம். ஏனெனில் சென்னைக்கு போகிறான்.

திடீரென பெண் மோகம் ஏற்பட்டு கெட்டு போய்விடுவானே என்ற காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆசை மற்றும் அம்மாவின் பயம் இவற்றை கருத்தில் கொண்டு சினிமா மீது மட்டுமே கவனம் செலுத்தி கடைசியில் அம்மா அப்பா பார்த்த பெண்ணையே திருமணம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கு எதிராக குழந்தை விஷயத்தில் முடிவெடுத்த ராதிகா… சிக்கிதவிக்க போகும் கோபி!…

இவர் நடிகராக இருந்த காலத்தில் ஏகப்பட்ட நடிகைகள் இவரை காதலித்ததாக ஒரு மேடையில் சிவக்குமார் கூறினார். ஆனால் பெத்தவங்க மீது கொண்டிருந்த மரியாதை. அவரை காதல் பக்கம் சாய விட வில்லை. இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் சிவக்குமாருக்கு 100வது படமாக அமைந்தது ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’.

இந்த படம் சிவக்குமார் கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றியை தந்த படம். அதனால் இந்த பட விழாவிற்கு எம்ஜிஆரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்களாம். ஆனால் எம்ஜிஆருடன் இருந்த சில பேர் இந்த விழாவிற்கு போக கூடாது என தடுத்தார்களாம். ஏனெனில் சிவக்குமாருக்கும் எம்ஜிஆரை சுற்றி இருந்த அந்த சில பேருக்கும் ஏதோ பிரச்சினை இருந்ததாகவும் அதனாலேயே எம்ஜிஆரை சிவக்குமாரின் பட விழாவிற்கு போக கூடாது என தடுத்ததாகவும் சித்ரா லட்சுமணன் அவருடைய சேனலில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்

மற்ற படி எம்ஜிஆருக்கும் சிவக்குமாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் எம்ஜிஆரின் நன் மதிப்பை பெற்ற நடிகர்களில் சிவக்குமாரும் ஒருவர் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

Continue Reading

More in Cinema News

To Top