Connect with us
sivakarthikeyan keerthy suresh

Cinema News

கீர்த்தி சுரேஷை காதலித்த எஸ்கே… கடைசியில் நடந்த பிரச்னை… விளாசும் பிரபலம்

SK_ Keerthi Suresh: சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வந்ததாக பிரபல திரை விமர்சகர் சபிதா ஜோசப் சொல்லி இருக்கும் விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். முதலில் அவரை குறித்து பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் இல்லை. தொடர்ச்சியாக ரெமோ படத்தில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து அவரை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

இதையும் படிங்க: படம் குப்பை.. சூர்யாவை ஏன் திட்டுறீங்க? கொந்தளித்த அஜித்தின் நலம் விரும்பி

தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் இனி நான் அடுத்த ஜென்மத்தில்தான் சிவகார்த்திகேயனோடு பணி புரிவேன் எனப் பேசி இருப்பார். அவர் எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்ததாக சொல்லி இருப்பார். ஆனால் அந்த விஷயம் குறித்து எதுவும் அவர் பேசவில்லை.

இருந்தும் பலரும் அது இதுவாக தான் இருக்கும் என பல யூகங்களை இணையத்தில் வெளியிட்டனர். சிவகார்த்திகேயன் தப்பான உறவில் இருப்பதாக கூட பிரச்னைகள் வெடித்தது. இருந்தும் எஸ்கே தரப்பு அதுகுறித்தும் எந்தவிளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.

இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்

இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் சபிதா ஜோசப் தன்னுடைய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இரண்டு, மூணு படங்களில் ஒன்னா நடிச்சாங்க. அவங்களுக்கு உள்ளே ஒரு லவ் ஓடுச்சு. அப்புறம் குடும்பத்தில் இருந்து அவருக்கு டென்ஷன் ஏத்துற மாதிரி ஒரு எதிர்ப்பு உருவாச்சு.

இதனால் உஷாரான சிவகார்த்திகேயன் அதில் இருந்து விலகிவிட்டார். ஆனால் அடுத்த சில விஷயங்களில் சிக்கி கொண்டார். இருந்தும் கீர்த்தி சுரேஷிடம் இருந்து தள்ளிப்போனதற்கும், அவரும் தொடர்ந்து நடிக்காததுக்கும் இதான் காரணம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top