Categories: Cinema News latest news

தனுஷ் பாதையில் பயணிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்..? விரிவான விவரம் இதோ..

தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பால் தமிழை தாண்டி ஹிந்தி, இங்கிலீஷ் என பயணித்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஒரு படம் கமர்சியல் படமாக கொடுத்தால் அடுத்த படம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டங்களில் ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி வந்தார். மேலும் ரஜினியின் பல தலைப்புகளை தன் படத்திற்கும் வைத்து வந்தார். ஏனென்றால் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தான் தனுஷ் திருமணம் செய்திருந்தார்.


தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், மாப்பிள்ளை, படிக்காதவன், தங்க மகன் ஆகிய படங்கள் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம் தலைப்புகள் தற்போது இதே பாணியை சிவகார்த்திகேயனும் பின்பற்று வருகிறார்.

இதையும் படியுங்களேன் – ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மிஞ்சும் சூர்யா… அடுத்து வரப்போகும் மெகா வில்லன் இவர் தான்…

ஆம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு வேலைக்காரன் என ரஜினி பட தலைப்பை வைத்து இருந்தார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ரஜினி பட தலைப்பான மாவீரன் எனும் தலைப்பினை வைத்துள்ளனர்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது பிரிந்து உள்ளனர். ஆதலால் ரஜினி பட தலைப்பை இனி  தனுஷ் வைக்க மாட்டார், என்று தீர்மானித்து, சிவகார்த்திகேயன் இந்த வேலையை செய்து வருகிறாரா என்று சினிமா வட்டாரத்தில் சிலர் கிசுகிசுத்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan