×

நயன்தாராவைப் பின்னுக்குத் தள்ளிய சினேகா... சிரிப்பழகியின் சாதனை

தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவை விட அதிகமான விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் சிரிப்பழகி சினேகா. 
 

`லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவைத் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் வரிசையில் நிற்கிறார்கள். இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கிரிப்டுகளில் மட்டுமே அம்மணி நடித்து வருகிறார். இப்போது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படத் தயாரிப்பிலும் களம் கண்டிருக்கிறார். 


இவர்களது ரவுடி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான `கூழாங்கல்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது பெற்றது. இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நயன் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல், விளம்பரப் படங்களில் நடிப்பதையும் நயன் நிறுத்தவில்லை. ஆனால், விளம்பரப் படங்களைப் பொறுத்தவரை நயனை முந்திவிட்டாராம் நடிகை சினேகா. 


நடிகர் பிரசன்னாவை மணந்த பிறகு ஹீரோயினாக வாய்ப்புகள் சினேகாவுக்குக் குறைந்தன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரப் படங்கள் என சினேகா மாற்றி யோசித்துவிட்டார். பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த சினேகா வசம் ஏகப்பட்ட விளம்பரங்கள் கைவசமிருக்கின்றன. இவர் ஒருநாளைக்கு ரூ.2 லட்சத்தை விளம்பரப் படங்களில் நடிப்பதற்காக ஊதியமாக வாங்குகிறாராம். அந்தவகையில் நயனையே ஓரங்கட்டிவிட்டார் என்கிறார்கள். சினேகாவின் கணவர் பிரசன்னாவும் அதிகப்படியான விளம்பரங்களில் நடித்து வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News