Categories: Cinema News latest news throwback stories

விரும்புகிறேன் படத்தில் நடிச்சது சினேகாவே இல்லையாம்… ஏமாத்திட்டாங்க மக்கா!

Sneha: நடிகை சினேகா நடிப்பில் வெளியான முதல் திரைப்படமான விரும்புகிறேனில் அவர் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் சில காட்சிகளில் சினேகா நடிக்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த், சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விரும்புகிறேன். தேவா இசையமைப்பில் உருவான விரும்புகிறேன் திரைப்படம் சினேகாவின் நடிப்பில் வெளியான முதல் படமாகும். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சினேகாவிற்கு இப்படத்திற்கான சிறந்த நடிகை விருது கிடைத்தது. 

இதையும் படிங்க: கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..

ஆனால் சினேகாவுக்கு முதல் படத்தில் நிறைய கசப்பான விஷயமே நடந்து இருக்கிறதாம். அதுகுறித்து சினேகா கூறும்போது, நான் பண்ரூட்டியில் பிறந்தாலும் சில வருடங்கள் துபாயில் தான் வளர்ந்தேன். ஆனால் மனதளவில் தமிழ் பெண்ணாக தான் வளர்ந்து வந்தேன். பெரிய போராட்டத்துக்கு பின்னர் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், என் மீது விரும்புகிறேன் பட இயக்குனருக்கு ஏன் கோபம் என்பதே தெரியவில்லை. தயாரிப்பாளரின் சிபாரிசில் தான் நடிக்க தொடங்கினேன். ஒரு பெரிய கிணறுக்குள் நான் இறங்கி இருக்கணும். பிரசாந்த் வந்து என்னை காப்பாத்தும்படியாக சீன் இருக்கும். அந்த காட்சி படப்பையில் நடந்தது.

இதையும் படிங்க:தக் லைப் படத்தில் காலியான 2வது விக்கெட்!… அவருக்கு பதிலா நடிக்கபோவது அந்த நடிகராம்!..

நான் முதலில் இறங்க தயாராகி விட்டேன். ஆனால் என் ஷூட்டிங்கில் இருந்த ஒருவர் தண்ணிக்குள் நிறைய தண்ணி பாம்பு இருக்கும் என்கிறார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. கடிக்குமா என்றேன். ஆனால் அவரோ கடிப்பதெல்லாம் பரவாயில்லை. தண்ணிக்குள் நிற்க முடியுமா என்றார். எனக்கு அவ்வளவு மோசமான தண்ணியிலே நிற்பதே அலர்ஜி. அதை இயக்குனரிடம் சொன்னேன். ஆனால் அவரோ கண்டிப்பா அதில் தான் நடிக்க வேண்டும் என்றார்.

நான் கடுப்பாகி இனிமேல் நான் சினிமாவிலே இல்லை. மொத்தமாக போகிறேன் என்றேன். பின்னர் தான் எனக்கு பதிலாக ஆண் ஒருவரை பாவடை கட்டி முதுகு மட்டும் தெரியும்படி உள்ளே இறங்கினார்கள். அது அவரின் கேரியரின் மனதில் மிகப்பெரிய கருப்பு புள்ளியை உருவாக்கி விட்டதாம்.

Published by
Shamily