Connect with us

Cinema News

சாய் பாபா கோயில்னா ஓகே.. காஞ்சிபுரம் கோயிலில் கூடாதா?.. திடீரென சவுண்டு சரோஜாவாக மாறிய விஜய் அம்மா?

நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் வந்து அவரை வீடியோ எடுத்த நிலையில், திடீரென நீங்க எல்லாம் இங்கே வரக்கூடாது என கத்திக் கூச்சலிட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்காக சென்னை கொரட்டூர் அருகே சாய்பாபா கோயில் ஒன்றை கட்டி கொடுத்திருந்தார். அந்த கோயிலை ஏகப்பட்ட மீடியாக்கள் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தனர்.

இதையும் படிங்க: என்னவொரு முரட்டுத்தனம்!.. மேடையிலேயே அஞ்சலி மேல கையை வச்ச பாலய்யா!.. ஷாக்கிங் வீடியோ!..

ராகவா லாரன்ஸ் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த போது அவருடன் வந்த ஷோபா சந்திரசேகரையும் வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஷேர் செய்து தனது நண்பர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

அப்போதெல்லாம் யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் என அவர் தடுக்க வில்லையே தற்போது காஞ்சிபுரம் கோயிலில் வீடியோ எடுக்கும் போது மட்டும் ஏன் இப்படி கத்தி கூச்சல் இட்டுள்ளார் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: நாங்க ரெண்டு பேரும் அதுல கில்லாடி! ‘தக்லைஃப்’ படத்தில் சம்பவம் செய்யப் போகும் கமல், சிம்பு

ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் இருவரும் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், விஜயேந்திரரரை சந்தித்து ஆசி பெற்று சென்றுள்ளனர். எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தபோது மகன் விஜய்யின் அரசியல் வருகைக்கு எப்போதும் தங்களது ஆசிர்வாதம் இருக்கும் என்று கூறிச் சென்றார்.

தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் தனது பெற்றோர்களை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில் தற்போது காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்று அவரது பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆளே அடையாளம் தெரியாமல் மோசமான லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் நாயகி்!… அட என்னப்பா இப்படி?

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top