ஆளே அடையாளம் தெரியாமல் மோசமான லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் நாயகி்!... அட என்னப்பா இப்படி?

Rajinikanth: ரஜினிகாந்த் இன்னமும் எனர்ஜியாக நடித்துக் கொண்டு இருக்கும் போது அவருடன் நடித்த நாயகிகள் ஆளே அடையாளம் தெரியாமல் வயதாகி காணப்படுவது தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இன்னொரு நாயகி ஒருவரின் புகைப்படம் வைரலாக தொடங்கி இருக்கிறது.

1970 முதல் 80 வரை தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்தவர் பிரமிளா. இதுவரை 50க்கும் அதிகமான மலையாள படத்தில் நடித்தாலும் தமிழ்சினிமாவில் அரங்கேற்றம் படத்தில் தான் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்து இருந்தார்.

இதையும் படிங்க: உள்ளத உள்ளபடியா எடுத்தா நடிக்கலாம்… உங்களுக்கு இருக்க நக்கல் குறையாது சாரே… வைரலாகும் சத்யராஜ்!…

அப்படம் பிரமிளாவுக்கு நல்லதொரு தொடக்கத்தினை தமிழ் சினிமாவில் உருவாக்கி கொடுத்தது. இருந்தும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் அமைந்தும். பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் படங்களாக இல்லாமல் சாதாரண படங்களில் நடித்து இருந்தார். தமிழில் 45க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். அமெரிக்கன் ஒருவரை மணந்துக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்டார்.

அதில் இருந்து சினிமாவில் இருந்தும் ஒதுங்கினார். பார்க்கவே ஹோம்லி லுக்கில் இருந்த பிரமிளா தற்போது வயதாகி இருந்தாலும் மேக்கப்பில் பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இருந்தும் அவரின் வீடியோவில் ரசிகர்கள் அரங்கேற்றம் படத்தினை நியாபகம் வைத்து பேசி வருகின்றனர். தற்போது இவரின் பழைய புகைப்படத்துடன் தற்போதைய படத்தினை இணைத்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் பிரமிளா டாலர் அச்சடிக்கும் இடத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்று இருக்கிறாராம். திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றவர் அங்கு இருக்கும் இந்த கோர்ஸை முடித்துவிட்டு இந்த பணியில் சேர்ந்து சிவில் லா படித்து முதல் வகுப்பில் பாஸ் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. நல்ல சம்பளத்தில் இருந்த பிரமிளா தற்போது தன்னுடைய ரிட்டயர்மெண்ட்டை எஞ்சாய் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story