×

கமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய செம ஹிட் பாடல்கள்...ஒரு பார்வை...

சொந்தக்குரலில் கமல் பாடிய பாடல்கள் பற்றிய பதிவு
 
kamal singing

திரையுலகில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் சிறப்பான முறையில் பாடக்கூடியவர்தான் கமல்ஹாசன். 70கள் தொடங்கி தற்போது வரை பல படங்களில் கமல் பாடி வருகிறார்.

ருத்ரய்யா இயக்கி இளையராஜா இசையமைத்த அவள் அப்படித்தான் படத்திலேயே கமல் பாடிய பன்னீர் புஷ்பங்களே என்ற பாடல் பலரது உள்ளத்தௌ உலுக்கியது என சொல்லலாம். சோகப்பாடலான அந்த பாடலை கமல் உணர்வுகளுடன் பாடி இருந்தார். இன்று வரை கேட்க கேட்க திகட்டாத இனிய பாடல் இது. கமலின் 100வது படமாக வந்த ராஜபார்வையில் விழியோரத்து என்ற மிக கனமான சோக பாடலையும் கமல் அழகாக பாடி இருந்தார்

கமல்

பேர் சொல்லும் பிள்ளை படத்தில் வரும் அம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி என்ற பாடல் கமல் பாடி பெரிய ஹிட் அடித்த பாடல் ஆகும் இதில் கமல் சிறப்பாக பாடவே வழக்கமாக இரண்டு சரணம் வரும் இந்த பாடல் எக்ஸ்ட்ரா ஒரு சரணம் வரும் அளவுக்கு பெரிய பாடலாக வந்தது. கலகலப்பான சிறப்பான பாடல் இது.

எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த பல படங்களில் கமல்ஹாசனும் பாடி விடுவார். விக்ரம் படத்தில் டைட்டில் பாடலாக வந்த விக்ரம் என்ற பாடலும் கூடவே ரோபோ விக்ரம் என்று கர கர குரலில் சொல்வது போல வந்த விக்ரம் பாடலும் புகழ்பெற்ற பாடலாகும் இந்த பாடலை கமல் பாடி இருந்தார். அந்நாளைய ரேடியோக்களில் இப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும்.

kamal
Dasavatharam

இளையராஜா இசையில் கமல் தேவர் மகனில் பாடிய சாந்துப்பொட்டு ஒரு சந்தனப்பொட்டு இந்த பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தான் பாடி இருந்தார். இருப்பினும் சரணத்தின் நடுவில் கமல்ஹாசனும் இணைந்து பாடி இருப்பார் எஸ்.பிபியும் கமலும் இணைந்து பாடிய பாடல் இது. இப்படத்தில் கமல் பாடிய மற்றொரு பாடலான இஞ்சி இடுப்பழகி பாடல் தான் வார்ல்ட் ஃபேமஸ் ஆன பாடல். பலரும் இப்பாடலை போட்டு போட்டு தேய்த்திருப்பர் என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்ம்யூல் உள்ளிட்ட பாடல் பாடும் தளங்களில் இப்பாடலை வெள்ளைக்கார பெண்கள், கறுப்பின பெண்கள் என வெளிநாட்டுக்காரர்களும் ரொம்ப அசால்டாக பாடுவதுதான் இஞ்சி இடுப்பழகி பாடலின் வெற்றி, ஜானகி அவர்களுடன் கமல் பாடிய பாடல் அது.

kamal
kamal

சிங்காரவேலன் படத்தில் கமல் பாடிய போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி என்ற பாடல் சிறந்த அதிரடி டூயட்டாக அமைந்தது. கமல் அதிரடியான பாடல்களை மட்டுமே பாடி வந்த நிலையில் மென்மையாக அவர் பாடி வெளிவந்த உன்ன விட இந்த உலகத்துல உசந்தது பாடல் சிறந்த டூயட் பாடலாகும். ஷ்ரேயா கோசலுடன் இணைந்து அந்த பாடலை கமல் பாடி இருந்தார் பலராலும் இப்பாடல் பாராட்ட பெற்றது.

கமல் தனக்கு மட்டுமல்லாமல் நடிகர் மோகன் உச்சத்தில் இருந்த காலத்தில் ஓ மானே மானே என்ற படத்தில் பொன்மானை தேடுதே என் வீணை பாடுதே என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை மோகனுக்காக கமல் பின்னணியில் பாடி இருந்தார். அது போல புதுப்பேட்டை படத்தில் யுவனின் இசையில் நெருப்பு வானில் பாடலை பாடி இருந்தார்.

kamal
Devar Magan

தசாவாதாரம் படத்தில் இடம்பெற்ற ஓஹோ சனம் பாடலை ஹிமேஷ் ரேஷ்மியா இசையில் பாடி இருந்தார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மன்மதன் அம்பு படத்தில் தகிடு தத்தோம், தெனாலி படத்தில் இடம்பெற்ற  ஆலங்கட்டி மழை உள்ளிட்ட அற்புதமான பாடல்களையும் பாடியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் தூங்காவனம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களிலும் கமல் பாடியுள்ளார்.

வித்யாசாகரின் இசையில் வந்த அன்பே சிவம் படத்தில் யார் யார் சிவம் என்ற பாடல் மிக கம்பீரமான ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட பாடலாகும் இப்பாடலும் பலரால் பாராட்ட பெற்றது.

இன்றும் கமல் பாடினாலும் கமல் பாடிய பழைய பாடல்கள் போல் இல்லை என்பதுதான் நிதர்சனம். அவர் அதிகம் பாடிய இளையராஜா இசையில் கூட சில வருடங்கள் முன்பு முத்துராமலிங்கம் என்ற படத்துக்காக கமலை இளையராஜா பாடவைத்தார் இளையராஜா கமலின் பழைய காம்போ போல் அப்பாடல்கள் எல்லாம் அமையாமல் போனது வருத்தமான விசயமாகும்.

From around the web

Trending Videos

Tamilnadu News