Categories: Cinema News latest news

இனிமே நான் காமெடியன் இல்லைடா!.. டெரர் பீஸ்.. சத்தமே இல்லாமல் சம்பவம் பண்ணும் சூரி!..

பரோட்டா காமெடிக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் தான் சூரியின் காமெடிக்கு சிரிப்பே வரும். அதை அவரும் புரிந்து வைத்துக் கொண்டார் போல, உடனடியாக வெற்றிமாறனிடம் இணைந்து சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலல் நடிப்பில் வெளியான விடுதலை படத்தில் கதையின் நாயகனாக கலக்கினார் சூரி. அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது.

இதையும் படிங்க: பிரபாஸுக்கு வேட்டு வைத்த பாலிவுட் பாட்ஷா!.. இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு எச்சரிக்கிறாரா?

கூழாங்கல் படத்தைப் போலவே கொட்டுக்காளி படமும் பல சர்வதேச விருதுகளை குவிக்கும் என்றே தெரிகிறது. இந்நிலையில், அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் உருவாகி வரும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் சூரி ஆக்கிரோஷமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பேரன்பு படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிக்கின்றனர். இந்த படமும் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்க உள்ள நிலையில், அந்த படத்த்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி 68 படத்துல அந்த பாகுபலி நடிகர் நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் போட்டோ.. உண்மை என்ன?..

அதில், நடிகர் சூரி டபுள் பேரல் துப்பாக்கி உடன் வெறித்தனமாக கொடுத்திருக்கும் போஸை பார்த்த ரசிகர்கள் இனிமேல் இவர் காமெடி பக்கம் வரவே மாட்டார் போல தெரிகிறதே என்றும் இதுதான் உங்களுக்கு சரியான ரூட் அப்படியே போயிடுங்க பாஸ் என்றும் கூறி வருகின்றனர்.

 

Saranya M
Published by
Saranya M