×

தமிழ்சினிமாவை கலக்கிய காமெடி நடிகர்கள் -ஒரு பார்வை

தமிழ்சினிமாவை அன்றும் இன்றும் என்றும் கலக்குவதில் காமெடி சினிமாக்கள் தனி இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் படங்களுக்கு ஹீரோ இமேஜ் தேவையில்லை. படம் காமெடியாக இருந்தால் போதும். திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பர். என்.எஸ்.கே. என்று அழைக்கப்படும்
 
Nagesh

தமிழ்சினிமாவை அன்றும் இன்றும் என்றும் கலக்குவதில் காமெடி சினிமாக்கள் தனி இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் படங்களுக்கு ஹீரோ இமேஜ் தேவையில்லை. படம் காமெடியாக இருந்தால் போதும். திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பர். என்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் கலைவாணர்ää காளி என்.ரத்னம்ää டி.ஆர்.ராமச்சந்திரன்ää சந்திரபாபுää நாகேஷ்ää எம்.ஆர்.ராதாää கவுண்டமணääp செந்தில்ää வடிவேலுää ஓமக்குச்சி நரசிம்மராவ்ää பாண்டுää இடிச்சபுளி செல்வராஜ்ää என்னத்த கண்ணையாää ஜனகராஜ்ää வி.கே.ராமசாமிää எஸ்.வி.சேகர்ää பாண்டியராஜன்ää பாக்கியராஜ்ää பார்த்திபன்ää விவேக்ää வடிவேலுää சந்தானம்ää யோகிபாபு நடிப்பில் வெளியான படங்கள் அத்தனையும் காமெடியாகவே இருக்கும். அதேபோல் மனோரமாää கோவைசரளாää காமெடி நடிகையாகவே கடைசி வரை நடித்து அசத்தினர்.  

சபாபதி(1941) இம்சை அரசன் 23ம் புலிகேசி, தில்லுமுல்லு (1981), கதாநாயகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழ்படம், பஞ்சதந்திரம், பாஸ் என்கிற பாஸ்கரன், களவாணி, முண்டாசுப்பட்டி, பிஸ்தா நானும் ரௌடிதான், சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தேசிங்கு ராஜா, சின்னத்தம்பி, கரகாட்டக்காரன், காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, மான்ஸ்டர், தாராளபிரபு ஆகிய படங்களை தமிழ்சினிமாவின் எவர்கிரீன் காமெடி படங்கள் எனச் சொல்லலாம்.

நாகேஷ்;

நாகேஷ் என்ற மாபெரும் கலைஞர் தான் பாடி லாங்குவேஜ் மூலம் சினிமாவில் நகைச்சுவையைக் கொண்டு வந்தவர். இவர் படத்தில் வந்தால் பேசவே வேண்டாம். இவரைப் பார்த்தாலே போதும் குபீரென சிரிப்பு வந்து விடும். இவருடைய  செய்கையாலே 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசாமலேயே சிரிக்க வைப்பார். பெரும்பாலான எம்.ஜி.ஆர். படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பார். சர்வர் சுந்தரம்ää எதிர்நீச்சல் போன்ற படங்களில் கதாநாயகனாக திறம்பட நடித்து படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பார். பிற்காலத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். இவர் பன்முகத்திறன் கொண்ட கலைஞர். கமல் இவரை இவரது ரசிகர் நான் என பெருமிதத்துடன் கூறியிருப்பார். திருவிளையாடல் படத்தில் தருமியாக இவர் கலக்கியிருக்கும் காட்சி இப்போது பார்த்தாலும் பரவசமாக இருக்கும். கமலின் அப10ர்வ சகோதரர்கள் படத்தில் மிரட்டலான வில்லனாக வரும் நாகேஷ் நம்மவர் படத்தில் பிணமாக நடித்து பேசாமலேயே சிரிக்க வைத்திருப்பார். 

கவுண்டமணி - செந்தில் 

தமிழ்சினிமாவின் காமெடி இரட்டையர்களாக கவுண்டமணி செந்திலை ஆங்கிலப்பட காமெடி இரட்டையர்களான லாரல் - ஹார்டி ஆகியோருக்கு உதாரணமாகச் சொல்வர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தாலே படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ காமெடிக்காகவே படம் 100 நாள்களைக் கடந்து ஓடி விடும். அதில் குறிப்பிடத்தக்க கவுண்டமணியின் படங்களாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் உனக்கு பெட்மாஸ் லைட்டே தான் வேணுமா....என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்கும் பாடி லாங்குவேஜூம் சரி அவரது வசன உச்சரிப்பும் சரி...அடேங்....கொக்கா...மக்கா...எனும் அளவிற்கு உள்ளது. அதேநேரம் செந்தில் கோழி முட்டை மாதிரி இருக்கு...இதுல எப்படிண்ணே...லைட் எரியும்னு அந்த டங்ஸ்டன் இழைச்சுருளை பிடித்து அமுக்கி உடைக்கும்போதும் வயிறு வலிக்க சிரி;க்க முடிகிறது. தொடர்ந்து கவுண்டமணி அவரை கோபமாக பார்க்கும்போது என்னண்ணே இப்படி உடைச்சிட்டீங்க....என அப்பாவியாய் செந்தில் கேட்டதும் திரையரங்கமே சிரிப்பலையால் அதிர்கிறது. அதேபோல் கரகாட்டக்காரனில் வாழைப்பழ காமெடியை யாராலும் மறக்க முடியாது. 'அண்ணே...அண்ணே என வளைய வளைய வரும் செந்திலை டேய்...கோமுட்டித்தலையா பேரிக்காய் தலையா பரங்கிக்காய் மண்டையா" என திட்டியும் உதைத்தும் நம்மை விலா நோகச் சிரிக்க வைப்பார் கவுண்டமணி. 
 அதேபோல் சத்யராஜ் -கவுண்டமணி பார்த்திபன் - வடிவேலு காமெடியும் ரசிக்கத் தகுந்தவை.

கலைவாணரைப் போல் விவேக்; மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பார். அதேபோல் வைகைப்புயல் வடிவேலு தனது தனித்துவமான பாடி லாங்குவேஜால் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பார். சமீபத்தில் விவேக் மாரடைப்பால் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Actor vivek

படத்தில் இவர் சிரிக்க மாட்டார். பாடி லாங்குவேஜூம் கிடையாது. வெறும் வார்த்தைகளால் பேசி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது இவரது தனி பாணி. இவர் யார் தெரியுமா இவர் தான் வி.கே.ராமசாமி. இவரது நகைச்சுவையை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கமல் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தற்போது கவுண்டமணி சாயலில் சந்தானம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Kovai sarala

நடிகர்களைப் போல் நகைச்சுவை பெரும்பாலும் நடிகையருக்கு வருவதில்லை. அப்படி அபூர்வமாக வந்தவர்கள் ஆயிரம் திரைகண்ட ஆச்சி மனோரமாவும் கோவை சரளாவும் நகைச்சுவை நடிகையரில் குறிப்பிடத்தக்கவர்கள்.  

From around the web

Trending Videos

Tamilnadu News