கடந்த 2020-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அறிமுக இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அந்தப் படத்தை டைரக்ட் செய்திருந்தார்.
அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அவரது அடுத்த படம் ஆரம்பிக்கவே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு படம் பண்ணுவதற்காக இரண்டு ஆண்டுகளை செலவு செய்த தேசிங்கு பெரியசாமி படத்தின் பட்ஜெட் காரணமாகவும் ரஜினிகாந்தின் வயது காரணமாகவும் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாது என கூறி விட்ட நிலையில், கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு அந்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பப்ளிசிட்டி புடிக்காது!.. ஆனால், அதெல்லாம் பண்ணுவோம்.. அஜித்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!..
எஸ்டிஆர் 48 என்கிற அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும் நிலையில் இன்னமும் அந்த படம் ஆரம்பிக்க வில்லையே என ரசிகர்கள் காத்திருந்து கடுப்பான நிலையில், எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்பு வரும் பிப்ரவரி 3-ம் தேதியுடன் 41-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிட உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: புரடெக்ஷன் சாப்பாட்டில் இப்படி ஒரு விபரீதம் நடந்ததா? அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?
100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு இந்த படத்தில் போர் வீரனாக நடிக்கப் போகிறார் என்கின்றனர்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…