×

ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு... சமந்தா போட்ட பதிவு!
 

கணவருடன் ஜோடியாக சமந்தா போட்ட ரொமான்டிக் பதிவு...!
 
 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா , ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது காதலர் தினத்தின் ஸ்பெஷலாக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் ஆளாகியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகிவிட்டனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News