Categories: Cinema News latest news

நீ அந்த சாதியா?.. வெட்கமா இல்ல!.. பிரபல இசையமைப்பாளர் கேட்ட கேள்வி… முதல் வாய்ப்பே இப்படித்தானா?..

Suchitra: பாடகி சுசித்ரா கோலிவுட்டில் நிறைய வெற்றி பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் அவருக்கு முதல் பட வாய்ப்பு அவர் சாதியால் தான் கிடைத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட்டின் இந்த வார வைரல் டாபிக்காக இருப்பவர் சுசித்ரா. ஒரே பேட்டியில் மொத்த பிரபலங்களின் ரகசியங்களை கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார். இது அவருக்கு நிறைய எதிர்ப்புகளை உருவாக்கினாலும் சில ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். தன் முன்னாள் கணவரை ஹோமோ செக்ஸுவல் என கூறியவர் அவருடன் இருந்த தனுஷ் கூட்டத்தையும் விட்டு வைக்கவில்லை.

இதையும் படிங்க: தோழியின் மீது கை போட்ட லிங்குசாமி!.. பழி தீர்த்த உலக நாயகன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!…

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், த்ரிஷா, அனிருத், விஷால், ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் தங்கள் கூட்டத்தில் நடந்து கொள்ளும் டார்க் சீக்ரட்களையும் தன்னுடைய பேட்டியில் வரிசையாக சுசித்ரா சொல்லி வருகிறார். ஆனால் இவர் பேட்டிகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் குறிப்பிட்ட பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகி சுசித்ரா எனக்கு முதல் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்ததுக்கே என் சாதி தான் காரணம். ஒருமுறை பரத்வாஜ் சாரை பார்க்க சென்று இருந்தேன். அவர் என்னுடைய பேச்சுவழக்கை கேட்டுவிட்டு ‘நீ அந்த சாதியா?’ எனக் குறிப்பிட்டு கேட்டார். நானும் ஆமாம் என்று கூறினேன். அப்போ ‘உனக்கு பாட தெரியுமா?’ எனக் கேட்டார்.

இதையும் படிங்க: முகத்தை காட்ட மறுக்கும் நயன்தாரா!.. ஒரே பேக்கிரவுண்ட் போட்டோக்களா போட்டுத் தாக்குறாரே!..

தனக்கு அதெல்லாம் தெரியாது எனக் கூற பரத்வாஜ் ‘வெட்கமா இல்லை.அந்த சாதியில் பிறந்துட்டு இந்த வார்த்தை சொல்ற?’ எனக் கடிந்துக்கொண்டு இருக்கிறார். பின்னர் சுசித்ரா கத்துக்கலை எனக் கூறினாராம். இதை தொடர்ந்தே அவருடைய குரல் நன்றாக இருப்பதாக கூறி ஜேஜே படத்தில் மே மாதம் 98 பாடலை பாட வாய்ப்பு கொடுத்தாராம். தமிழ் சினிமாவில் மட்டும் தான் பெரிய அளவில் சாதி கலாச்சாரம் இல்லை என யோசித்துவந்த நிலையில் இங்கையும் அதை செஞ்சிருக்காங்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Shamily