முகத்தை காட்ட மறுக்கும் நயன்தாரா!.. ஒரே பேக்கிரவுண்ட் போட்டோக்களா போட்டுத் தாக்குறாரே!..

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வரும் நிலையில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார். நயன்தாரா வெளியிட்ட அனைத்து புகைப்படங்களிலும் அவரது முகத்தை காட்டாமல் விக்னேஷ் சிவனுடன் நடந்து செல்லும் பேக் போஸ் புகைப்படங்களாகவே வெளியில் இருப்பது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: 2வது கல்யாணம் பண்ணியும் எனக்கு குழந்தையே இல்லை.. சுசித்ரா கணவர் கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோ!

கடந்த ஆண்டு புல்லாங்குழல் வாசிப்பவர் எல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து நடிகை நயன்தாராவுடன் இணைந்து கொண்டு விக்னேஷ் சிவன் திருமண நாளைக் கொண்டாடி இருந்தார். மேலும் ஏகப்பட்ட பார்ட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படி களைகட்ட போகிறதோ எனக்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுடன் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் பாட்டுக்கு திடீரென டான்ஸ் போட்ட ஷிவானி நாராயணன்!.. அவர் டிரெஸ்ஸை மட்டும் பார்த்துடாதீங்க!..

இந்நிலையில், தற்போது கடற்கரை, கோயில்கள், சாலைகளில் இருவரும் நடந்து செல்லும் போது பின்பக்கமாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், கடைசியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்ஐசி திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: கவினை நம்பி காசை கொட்டலாமா?.. ’ஸ்டார்’ பட சொதப்பலால் சுதாரித்துக் கொண்ட நெல்சன்!..

 

Related Articles

Next Story