Categories: Cinema News latest news

ரஜினியை ரகசியமாய் சந்தித்த சுதா கொங்கரா… தலைவர் 172 படத்துக்கு போட்ட பிளான்?… என்னப்பா சொல்றீங்க!

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, மோகன் லால், சுனில், சிவ ராஜ்குமார், யோகி பாபு போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். “லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. இத்திரைப்படத்தை தயாரிக்க லலித் குமார், சன் பிக்சர்ஸ், ஹொம்பாலே போன்ற நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ரஜினிகாந்த் தற்போது பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ  ரவிஷங்கரின் ஆஸ்ரமத்தில் தியானத்திற்காக தங்கியிருக்கிறாராம். இந்த நிலையில் நேற்று ஹொம்பாலே நிறுவனத்தாரும் இயக்குனர் சுதா கொங்கராவும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்களாம். அதாவது ரஜினிகாந்தின் 172 ஆவது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுதா கொங்கரா, ஹொம்பாலே நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஹொம்பாலே நிறுவனம், “கேஜிஎஃப்”, “காண்டாரா” போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்கு சொன்ன கதையில் ஹீரோவாக நடித்த சிம்பு… சச்சின் படத்துக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா?

Arun Prasad
Published by
Arun Prasad