விஜய்க்கு சொன்ன கதையில் ஹீரோவாக நடித்த சிம்பு… சச்சின் படத்துக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா?
விஜய், ஜெனிலியா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சச்சின்”. இத்திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
விஜய்யின் கேரியரில் ஒரு வித்தியாசமான ரொமான்ட்டிக் காமெடி திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படம் ரஜினிகாந்தின் “சந்திரமுகி” திரைப்படத்திற்கு போட்டியாக வெளியானது. ஆதலால் இத்திரைப்படம் ஓரளவுதான் வெற்றிபெற்றிருந்தது. எனினும் இத்திரைப்படம் இப்போதும் இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது.
விஜய்க்கு வந்த தொட்டி ஜெயா கதை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு “சச்சின்” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய பின்னணியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது முதலில் இயக்குனர் துரை, “தொட்டி ஜெயா” திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறினாராம். ஆனால் அந்த கதையின் இரண்டாம் பாகத்தை கொஞ்சம் மாற்றியமைக்குமாறு விஜய் கூறியிருக்கிறார். இயக்குனர் துரை அதற்கும் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார். ஆனால் அப்பணிகள் முடிவடைய மிகவும் தாமதமானதாம்.
இதனை தொடர்ந்துதான் கலைப்புலி எஸ்.தாணு, ஜான் மகேந்திரனை விஜய்யிடம் கதை சொல்ல வைத்திருக்கிறார். “குஷி” திரைப்படம் போல ஒரு படம் பண்ணலாம் என விஜய் நினைத்துக்கொண்டிருக்க, அவ்வாறுதான் “சச்சின்” திரைப்படம் உருவாகி இருக்கிறது.
அதன் பிறகுதான் இயக்குனர் துரை, “தொட்டி ஜெயா” திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்கினார். இத்திரைப்படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது கமலோட கதை- ரஜினிகாந்த் லெஃப்ட் கையால் தள்ளிவிட்ட ஸ்கிரிப்ட்… என்னவா இருக்கும்!