பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் நடத்தாமல் விட்டது தொடங்கி நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜவான் ஆடியோ வெளியீட்டு விழா வரை சன் டிவி நடிகர் விஜய் மீது தீரா வன்மத்தை கொட்டித் தீர்த்து விட்டது என தளபதி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஹீரோயினாக ரெடியாகிட்டாரா அதிதி ஷங்கர்!.. காருக்குள்ள இந்த குத்து குத்துறாரே!..
அதில், இயக்குநர் அட்லீ தளபதி விஜய்யை பற்றி பேசிய வார்த்தைகளை சன் டிவி எடிட் செய்து தூக்கி விட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழாவையே கலாநிதி மாறன் நடத்தவில்லை. நெல்சன் மற்றும் விஜய்யை வைத்து நேருக்கு நேர் என பேட்டி ஒன்றை மட்டுமே வெளியிட்டு சிறியளவில் அந்த படத்தை புரமோட் செய்தனர்.
இதையும் படிங்க: அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..
மேலும், பீஸ்ட் படம் லாபம் ஈட்டியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொன்னாலும், அதிகாரப்பூர்வ வசூலை ஜெயிலர் படத்துக்கு அறிவித்ததை போல அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துக்கு நள்ளிரவு 1 மணி காட்சியை உதயநிதி ஸ்டாலின் வழங்காமல் அஜித்தின் துணிவு படத்துக்கு மட்டுமே வழங்கினார் என்றும் குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலும் கலாநிதி பேசும் போது ரஜினிக்கு போட்டியில்லையா எனக் கூறி விட்டு தளபதி என நிறுத்தி விட்டு தளபதி விஜய் சொன்னமாதிரி ரஜினிக்கு போட்டி ரஜினி தான் என பேசியது தேவையில்லாமல் நடிகர் விஜய்யை அவமதித்து போலவே இருந்ததாகவும் இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…