×

ரூ.100 ஆகிப்போச்சு... இனிமே சைக்கிள் ஓட்டுங்க... சன்னிலியோனுக்கு செம நக்கல்தான்... 

பெட்ரோல் விலை பற்றிய சன்னி லியோனின் பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.
 
sunny leon

கடந்த பிப்ரவரி மாதம் முதலே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.90ஐ தாண்டிவிட்டது.. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து சமீபத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டது. அதேபோல், டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 101.37 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.94.15 எனவும் விற்பனை செய்யப்பட்டது. 

petrol

பெட்ரோல், டீசல் விலை இப்படி கடுமையாக உயர்ந்ததற்கு பலரும் கடுமையான கண்டங்களை தெரிவிது வருகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் கோபமாகவும், மீம்ஸ் போட்டு கிண்டடிக்கும் நகைச்சுவையாகவும் மாறியுள்ளது. வண்டியை திருட வருபவன் வண்டியை விட்டு பெட்ரோலை திருடி செல்வது போலவும் மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

sunny leon

இந்நிலையில், பாலிவுட் நடிகையும், கவர்ச்சி கன்னியுமான சன்னிலியோன் பெட்ரோல் விலையை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். சைக்கிளோடு ஸ்டைலாக நிற்கும் புகைப்படங்களை டிவிட்ட்ரில் பகிர்ந்து ‘கடைசியாக 100ஐ தாண்டிவிட்டது. உங்கள் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். சைக்கிளிங் செய்யுங்கள்’  என பதிவிட்டுள்ளார்.

sunny leon


சன்னிலியோனின் இந்த பதிவு நெட்டிசன்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம், பாஜக ஆதரவாளர்கள் அவரை திட்டி வருகின்றனர். சிலர், அவதூறாகவும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

sunny leon

From around the web

Trending Videos

Tamilnadu News