Categories: Cinema News latest news throwback stories

2கே கிட்ஸ்களை கவர்ந்த சூப்பர்ஹிட் ரீமேக் படங்கள்…. சொல்லி அடித்த கில்லி

தமிழ்ப்படங்களில் ரீமேக்கில் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் 2கே கிட்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் பல படங்கள் வெளியாகி உள்ளன. என்னென்ன படங்கள் என்று பார்ப்போமா…

கில்லி 2004 தளபதி விஜயின் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம். இது 2003ல் வெளியான ஒக்கடு என்ற படத்தின் ரீமேக். இயக்கியவர் தரணி. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பாடல்களும், பைட்டும் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றன.

இதையும் படிங்க… ‘இனிமேல்’ நீ அவ்ளோதான் ராசா.. கடுப்பில் வெளியானதுதானா ரஜினி 171 போஸ்டர்? பொட்டிப் பாம்பாக சுருண்ட லோகி

தளபதி விஜயின் நடிப்பில் 2001ல் வெளியான படம் ப்ரண்ட்ஸ். இது 1999ல் வெளியான மலையாள படமான ப்ரண்ட்ஸ் படத்தின் தழுவல். இயக்கியவர் சித்திக். படத்தில் நேசமணி என்ற பெயரில் பெயிண்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் நீளமான காமெடியை ரசிக்காமல் இருக்க முடியாது. சிரிக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் கூட இந்தக் காட்சியைப் பார்த்தால் சிரித்து விடுவார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம்.

2012ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த படம் நண்பன். இது 2009ல் வெளியான 3 இடியட்ஸ் என்ற இந்திப்படத்தின் ரீமேக். படத்தில் விஜயின் நடிப்பு புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Papanasam

2015ல் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான படம் பாபநாசம். இது 2013ல் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக். இயக்கியவர் ஜீத்து ஜோசப். யதார்த்தமான ஒரு குடும்பம், அங்கு நடக்கும் ஒரு கொலை, அதிலிருந்து தப்பிக்க முயலும் நாயகன், தன் குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்ற என்னென்ன யுக்திகளைக் கையாள்கிறான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கமல், கௌதமியின் நடிப்பு அருமை.

2004ல் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ்.
2003ல் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் என்ற இந்திப்படத்தின் தழுவல். இயக்கியவர் சரண். படத்தில் மருத்துவர் வெறும் சிகிச்சை மட்டும் அளிக்கக்கூடாது. நோயாளிகளின் மனங்களையும் அறிந்து நடக்க வேண்டும் என்பதை முத்தாய்ப்பாக சொன்ன படம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v