Categories: Cinema News latest news

இந்த படத்துக்கும் இரண்டாம் பாகமா? ஜெயம் ரவிக்காக அண்ணன் ரவி போடும் ப்ளான்!

ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் அவருக்கு தனி இடத்தினை பிடித்து தந்த முக்கிய படம் தான் தனி ஒருவன். அது வரை ரீமேக் படங்களை இயக்கி வந்த அவரின் அண்ணன் ரவி முதல்முறையாக அவரின் சொந்த கதையில் இயக்கிய படம் தான் தனி ஒருவன்.

மாஸ் வில்லனாக அரவிந்தசாமியின் மிரட்டல் நடிப்பு அவருக்கும் சினிமாவின் இரண்டாவது இன்னிங்ஸாக அமைந்தது. இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பெரும்பாலும் கோலிவுட்டின் சமீபத்திய ட்ரெண்ட்டாக வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகருடன் காதல், கல்யாணம் , அபார்ஷன்! பல தடைகளை தாண்டி ‘ஜெய்லர்’ படத்தில் கெத்து காட்டிய நாயகி

இதனால்  தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என எதிர்பார்ப்பு கிளம்பியது. ரசிகர்களின் ஆசையை பூர்த்தியாக்கும் பொருட்டு வரும் 28ந் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னவே ஜெயம் ரவி செய்தியாளர்களிடம் பேசும்போது தனி ஒருவன் 2 தொடங்க இருந்தது. ஆனால் தான் பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியானதால் தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டும் நடக்காமல் போனதாக அறிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: இப்பதான்டா நிம்மதி!.. விஜய் மீதுள்ள காண்டை சீரியலில் காட்டிய எஸ்.ஏ.சி.. வீடியோ பாருங்க…

இதை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருக்கிறது. நயனே நாயகியாக நடிக்கலாம். இல்லை அவருக்கு பதில் வேறு யாரும் வரலாம் என்றும் கூறப்படுகிறது. அத்தனை கேள்விக்கும் வரும் 28ந் தேதி பதில் கிடைத்து விடும். வெயிட்டிங்கை போடுவோம்!

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily