
Cinema News
1000 ரூபாய் அட்வான்ஸ் போதும்.! இது தான் சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் வெற்றி ரகசியம்.!
Published on
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் சிவாஜி. அதுவரை வெளியான தமிழ் படஙக்ளில் அந்த படம் தான் அதிக பட்ஜெட். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார்.
கதைக்கு என்னென்ன பிரமாண்டம் தேவையோ அதனை சமரசமில்லாமல் படமாக்கி இருப்பார்கள் படக்குழுவினர். இப்படத்தின் கதை , எப்படி இந்த படம் வர வேண்டும் என்பதை உணர்ந்து ரஜினி இந்த படத்திற்காக தனது சம்பளத்தை படம் முடிந்து வாங்கி கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.
வெறும் 1000 ரூபாய் மட்டும் அட்வான்ஸ் வாங்கி கொண்டு, இந்த படத்தில் நடித்து முடித்தாராம். முதலிலே ரஜினி கறாராக பேசி சம்பளம் வாங்கி இருந்தால் படத்திற்கு செலவு செய்ய சில சமயம் காசு இருந்திருக்காது, அதனால் படத்தின் தரம் கூட குறைந்திருக்கலாம். அதன் பிறகு வெளியாகி படத்தின் வெற்றி பற்றி சொல்ல தேவையில்லை. தமிழில் முதல் 100 கோடியை கடந்த திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது.
இதையும் படியுங்களேன் – பெண்ணை கட்டி புடிக்க சொன்னேன்.. பெத்த புள்ளகிட்ட இப்டிலாமா சொல்வார் நம்ம மன்சூர் அலிகான்.!?
ஆனால் அப்போது அவரது சம்பளம் சுமார் 18 கோடி அதனை, விட்டு கொடுத்து பிறகு வாங்கி கொள்கிறேன் என கூறி, படம் அனைத்து ஏரியாக்களில் விற்ற பிறகே சம்பளம் வாங்கினாராம் ரஜினி. அந்தளவுக்கு படம் மீது அக்கறை கொண்டிருந்தாராம் ரஜினி.
அதே போல, தான் அண்மையில் கே.ஜி.எப் 2 படத்திற்கு கூட தனது சம்பளம் 30 கோடியை படம் முடிந்த பிறகு வாங்கி கொள்கிறேன் என படம் முடிந்த பிறகு தான் வாங்கினாராம் யாஷ். அதனால், பட நிறுவனம் படத்திற்க்கு தேவையான பிரமாண்டத்தை சமரசமில்லாமல் இடையூறு இல்லாமல் செய்வார்கள் அதனால், படம் எதிர்பார்த்தபடி வரும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...