கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டை முதல் வாரத்திலேயே அடித்து துவம்சம் செய்து விட்டது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல். 430 கோடி வசூல் வேட்டையை இதுவரை ஜெயிலர் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் சில தீவிர ரஜினி ரசிகர்கள் 500 கோடியை கடந்து பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் முந்தி விட்டதாக போஸ்ட் போட்டு வருகின்றனர். ஆனால், இரண்டாம் வாரத்தின் முடிவில் தான் பொன்னியின் செல்வன் வசூலை ஜெயிலர் முந்தும் என பெருவாரியான டிராக்கர்கள் கணித்துக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ரகசிய பார்ட்டியில் நடந்த கலாட்டா!.. வீடியோவை வெளியிடுவேன் என தலைவரை மிரட்டும் ப்ளூ சட்டை மாறன்?..
60 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை:
இந்நிலையில், புக் மை ஷோவில் மட்டும் கடந்த ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15 சுதந்திர விடுமுறை வரை ஜெயிலர் படத்துக்கு சுமார் 60 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ், புக் மை ஷோவில் இடம் பெறாத பல லோக்கல் திரையரங்குகள் என ஜெயிலர் படத்துக்கு 7 நாட்களில் மொத்தமாக விற்ற டிக்கெட்டுகள் மட்டும் 80 லட்சம் வரை தாண்டும் என கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்துக்கு வந்ததை போல வசூல் வேட்டை நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்துக்கு வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..
வேறலெவலில் ரஜினிகாந்த் மாஸ்:
2.0 திரைப்படம் பட்ஜெட்டே அதிகம் என்பதால், லாபம் பெரிதாக வரவில்லை. ஆனால், ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய லாபம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள நிலையில், மீண்டும் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2ம் பாகத்தையே உருவாக்கவும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்தின் மாஸ் இன்னமும் கொஞ்சம் கூட குறையாத நிலையில், தலைவர் 170 மற்றும் 171 படங்கள் மற்றும் மேலும், சில படங்களும் அதிரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு குறுகிய காலத்தில் படத்தை இயக்கி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த தயாரிப்பு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…