Categories: Cinema News latest news

அடேங்கப்பா!.. லியோ படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்த்த சூப்பர்ஸ்டார்?.. உண்மை என்ன?..

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் முதல் நாளே திரையரங்கில் பார்த்ததாக ஒரு புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அது உண்மையான புகைப்படம் இல்லை.

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என ரஜினி ரசிகர்களும், நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் ரஜினிகாந்த் ரிடையர் ஆகிவிட்டார் என விஜய் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் ரஜினியின் ரசிகர் தான் நான் என்பதை நிரூபிக்கும் வகையில் லியோ திரைப்படத்தில் “நான் பொல்லாதவன்“ பாடலை விஜய் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மலை போல நம்பியிருந்த தளபதியை இப்படி கவுத்துபுட்டீங்களே லோகி! படம் பார்த்து விஜய் சொன்ன விஷயம்

அதைப்போல, விஜய்க்கும் எனக்கும் எந்த ஒரு பஞ்சாயத்தும் இல்லை என்பதை தொடர்ந்து வாய் மொழியாலும், செய்கைகளாலும் கூறி வருகிறார். இந்நிலையில் லியோ படத்தை முதல் நாளே கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜின் வொர்க் எப்படி இருக்கிறது என்பதை காண ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அந்தப் பட வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கா? உண்மையான ஹீரோ இவர்தான் – என்னாச்சு தெரியுமா?

ஆனால், அது ரஜினிகாந்தே இல்லை என்பது தான் உண்மை. சூப்பர்ஸ்டார் எப்போது இப்படி ரசிகர்களுடன் சகஜமாக தியேட்டரில் படத்தை பார்க்க முடியும். தனியாக ஸ்டூடியோவில் தான் அவருக்கு படத்தை போட்டுக் காட்டுவது வழக்கம். வைரலாகி வருவது ஃபேக்கான புகைப்படம்.

Saranya M
Published by
Saranya M