Connect with us
loki

Cinema News

மலை போல நம்பியிருந்த தளபதியை இப்படி கவுத்துபுட்டீங்களே லோகி! படம் பார்த்து விஜய் சொன்ன விஷயம்

Leo : பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த திரைப்படம் லியோ. விஜய் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டம்தான். வழக்கமாக விஜய் ஹேட்டர்ஸ்கள் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் படத்தில் சில பல மைனஸ்கள் இருப்பதாகவும் முக்கிய திரை விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

இருந்த எதிர்பார்ப்பிற்கு படம் அந்தளவு பூர்த்தி செய்யவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் எப்பொழுதும் உள்ள விஜய் படம் போல் இல்லாமல் வேறொரு கோணத்தில் லோகேஷ் காட்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அந்தப் பட வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கா? உண்மையான ஹீரோ இவர்தான் – என்னாச்சு தெரியுமா?

இந்த நிலையில் விக்ரம் படம் மாதிரி நம்ம படம் இருக்குமா என்று விஜய் கேட்டாராம். ஒரு பேட்டியில் கூறிய லோகேஷ் விக்ரம் படத்தை ஏற்கனவே பார்த்து எனக்கு வாழ்த்து சொன்னதாகவும்  ஒரு மூன்று வாரத்திற்கு முன்பு மீண்டும் விக்ரம் படத்தை விஜய் பார்த்ததாகவும் லோகேஷ் கூறினார்.

அந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் இதே மாதிரி நம்ம படம் வருமா என்று கேட்டாராம். ஆனால் படம் பார்த்த அனைவரும் ரோலக்ஸ் ரோலக்ஸ்தான் என விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவைத்தான் பாராட்டி வருகிறார்கள். அந்தளவுக்கு லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை லோகேஷ் கொண்டு செலுத்தவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்,

இதையும் படிங்க: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! லியோவில் சஸ்பென்சாகவே இருந்த அந்த பிரபலம் – இவரிடம் இப்படியொரு அவுட்புட்டா?

விக்ரம் படம் அது வேறொரு களம். அதை லியோவில் எதிர்பார்க்க முடியாது என்றும் ஒரு சில ரசிகர்கள் கூறிவந்தார்கள். ஆனால் இப்பொழுது வரைக்கும் ஒரு கலவையான விமர்சனத்தையே லியோ படம் பெற்று வருகிறது.

இதனை அடுத்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்து ரஜினி 171 படத்திற்கான வேலைகளில் லோகேஷ் இறங்கப் போவதாக கூறினார். அதுவரைக்கும் கொஞ்சம் பிரேக் எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரெட் லைட் வெளிச்சத்துல சும்மா அள்ளுது!. பாதி மறைச்சி மீதியை காட்டும் தமன்னா!…

google news
Continue Reading

More in Cinema News

To Top