Categories: Cinema News latest news

சூர்யா பேருக்கு இப்படி ஒரு களங்கமா.?! இதெல்லாம் நியமில்லங்க பேரம் பேசாதீங்க..,

தமிழ் சினிமாவில் தனது நடிப்புக்கேற்ற கதைக்களங்களையும், தனது ரசிகர்களுக்காக மாஸ் கதைகளையும் தேர்வு செய்து ஒரே நேரத்தில் தனது நடிப்பு மாஸ் என இரு துருவத்தையும் கரெக்ட்டாக சரி செய்து ரசிகர்கள் மத்தியில் நடிப்பின் நாயகனாக வளர்ந்து நிற்கிறார் சூர்யா.

நடிப்பது மட்டுமின்றி, தனது 2டி நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்தும் வருகிறார் சூர்யா. ஏற்கனவே அவர் தயாரிப்பில், சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் தயாரான நிலையில், அடுத்ததாக சூர்யா நடித்து பாலா இயக்கி வரும் படமும் தயாராகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் பாலா நாகர்கோவில், கோவா ஆகிய ஊர்களில் படமாக்கி வருகிறாராம். கிட்ட தட்ட நிறைய ஜூனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனராம். இவர்களுக்கு தினமும் பேட்டா போக அயனிங் பேட்டா கொடுப்பார்களாம். அதாவது துணி துவைத்து அயன் செய்து அணிந்து வருவதற்காக என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – சந்தானத்தை பங்கமாய் ஏமாற்றிய சார்பட்டா நடிகர்.! எவளோ பெரிய நடிகன இப்படி கதற விட்டுடீங்களே சார்.?!

அந்த பேட்டா 75 ரூபாய் வழக்கமாக கொடுத்த வருவார்களாம். ஆனால் இந்த படத்திற்கு அதில் பேரம் பேசி ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என கூறி  60 ரூபாய் கொடுத்தார்களாம். இதனால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் , பட நிறுவனத்துக்கும் சிறிய மனக்கசப்பு ஏற்பட்டதாம்.

Manikandan
Published by
Manikandan