Categories: Cinema News latest news

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. பாலா இயக்கத்தில் இருந்து தெறித்து ஓடிய சூர்யா!.. இதுதான் காரணம்?

நந்தா படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக சூர்யா மாற காரணமே பாலா தான். விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தில் தான் சூர்யா நடிகராக அறிமுகமானார். நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் சூர்யாவுக்கு நடிப்பே வரவில்லை. ஆனால், நடிப்பின் நாயகனாக சூர்யா இன்று மாறியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே பாலா பட்டறையில் அவர் பட்டைத் தீட்டப்பட்டது தான்.

அந்த நன்றிக் கடனை மறக்காமல் பாலா மார்க்கெட் காலியாகி பட வாய்ப்புகளே இல்லாமல் ஃபிளாப் இயக்குநராக சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு உதவி செய்யலாம் என அப்பா சிவகுமாரின் ஆணைக்கிணங்க இந்த படத்தில் நடிக்கவும் தயாரிக்கவும் ஒப்புக் கொண்டார்.

இதையும் படிங்க: கை இல்லாத ஜாக்கெட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!.. விருந்து வைக்கும் பிரியங்கா மோகன்…

ஆனால், சூர்யா தந்த வாய்ப்பை மதிக்காமல் படம் கிடைத்ததும் தனது வேலையை பாலா காட்ட ஆரம்பித்து இருக்கிறார். நீ இப்போ யாரா வேணா இரு ஆனாலும், கதையை சொல்லவே மாட்டேன் என பாலா சூர்யாவுக்கு கதை சொல்லாமல் சூட்டிங் நடத்த தொடங்கி விட்டார். சில மாதங்கள் 10 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தின் படப்பிடிப்பை சூர்யா நடத்திய நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேற காரணமே பாலாவின் அடக்குமுறை தான் செய்யாறு பாலு தனது புதிய பேட்டியில் கூறியிருக்கிறார்.

நந்தா, பிதாமகன் படங்களில் நடித்த சூர்யாவுக்கும் பாலிவுட் சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல் பாலா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மத்தியில் சூர்யாவை திட்டியதும் பீச்சில் தொடர்ந்து 4 நாட்கள் ஓடவிட்டதும் தான் காரணம் எனக்கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:  கை இல்லாத ஜாக்கெட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!.. விருந்து வைக்கும் பிரியங்கா மோகன்…

ஆனால், அருண் விஜய் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறேன் என நடிக்க வந்து பல அடிகளை வாங்கி சாக்கடையில் எல்லாம் விழுந்து புரண்டு நடித்திருக்கிறார் வணங்கான் படத்தில் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

 

Saranya M
Published by
Saranya M