Connect with us
kanguva

Cinema News

Kanguva: ஒரே ஒரு போன் கால்!.. கங்குவா சிறப்பு காட்சிக்கு பர்மிஷன் வாங்கிய சூர்யா!.. செம மேட்டரு!..

Kanguva: சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த 2 வருடங்களாக இந்த படத்திற்காக அசுர உழைப்பை போட்டிருக்கிறது படக்குழு. சூர்யாவின் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் இப்படத்தை அதிக பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறார்.

சூர்யா முதன் முதலாக நடித்திருக்கும் சரித்திர படம் இது. 300 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படம் உருவாகியிருக்கிறது. அதிக பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது. முதல் பாகம் வருகிற 14ம் தேதி வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: Kanguva: மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி… கங்குவா படத்திற்கு இடிமேல் இடி…!

பேன் இண்டியா படம் என்பதால் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பத்தானி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கங்குவா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பிரென்ச் உள்ளிட்ட பல மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஞானவேல் ராஜா கங்குவா முதல் பாகம் 2 ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என நம்பிக்கையுடன் கூறியது ட்ரோலிலும் சிக்கியது. ஒருபக்கம், சூர்யாவும் மும்பை, டெல்லி என பல மாநிலங்களுக்கு சென்று கங்குவா படம் தொடர்பாக புரமோஷன் செய்தார்.

kanguva

#image_title

இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஃபைனான்சியரிடம் ஞானவேல் ராஜா வாங்கிய 55 கோடி கடனை திருப்பி கொடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தற்போது வேறொரு நிறுவனத்திடம் வாங்கிய 1.60 கோடியை கொடுக்கவில்லை எனில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், அமரன் படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினிடம் பேசி சூர்யா இதற்கான அனுமதியை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், பண்டிகை நாட்களில் மட்டுமே காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி கொடுக்கப்படும். நவம்பர் 14ம் தேதி எந்த பண்டிகையும் இல்லை. ஆனாலும் சூர்யா – உதயநிதி நட்பால் இது நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருந்த முக்கிய பிரபலம்!.. மிஸ்ஸான கூட்டணி… இப்பவும் சான்ஸ் இருக்கு?!…

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top